அத்வைதத் தேன் தந்த பெரியவா !

அத்வைதத் தேன் தந்த பெரியவா !
மெட்டு: தேனே தென்பாண்டி மீனே !
படம்: உதயகீதம்
இசை: இளையராஜா

—————————————————–

–>பாடலை நண்பர் திரு.எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் குரலில் கேட்க

சீராய் அத்வைதத் தேனை
பொழிந்தாயே ! மொழிந்தாயே !
காஞ்சி குரு தேவா !
சந்த்ர சேகரேந்திரா…! ஸ்வாமி… நாதா..!
உன்னடி நாம் போற்றுவோம் !

(சீராய் அத்வைதத் தேனை)

தேனம்பாக்கம் கோயிலில் கர்ப்ப வாசம் செய்தவா !
தேவி த்ரிபுர சுந்தரி சேயாயிங்கு வந்தவா ! (2)

தேவன் சிவ பெருமான் மண்ணில்…
தேகம் கொண்டு வந்தவா..!
தேசம் எலாம் தர்மம் சொல்லி
பாதம் தேயச் சென்றவா…!

நாதா ! நீதான்…நெஞ்சத்திலே நிற்கும் தெய்வம் !

(சீராய் அத்வைதத் தேனை)

வேத பாடம் சொல்வதன் மேன்மை சொன்ன சங்கரா !
நாத ரூபமானவா ! நான்மறையின் நாயகா ! (2)

காம கோடி குருவாய் வந்த…
தாமரையின் பூ முகா…!

காருண் யத்தின் கடலாய் வந்த…
காசிநாதா ! ஈஸ்வரா !

நாதா ! நீதான்…நெஞ்சத்திலே நிற்கும் தெய்வம் !
( சீராய் அத்வைத)