சாயி லீலா !

சாயி லீலா !

ஆல்பம்: சர்வம் சாயி மயம்

பாடியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் ! கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் ! சாயி லீலா…குரு சாயி லீலா ! ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல‌ ஓராயிரம் லீலை ! ஒன்றோ ரெண்டோ சொன்னால் கூட‌ நெஞ்சில் பூத்திடும் சோலை ! (கேட்க) ஆழ்கடலில் கப்பலிலே மூழ்கியவன் ! ஆழ்ந்ததொரு பக்தியிலே பாபா என்றான் ! எங்கோ அந்த பாபா மீது நீரிறைத்தது ! இங்கே அந்த பக்தனவன் உயிர் பிழைத்தது ! (கேட்க) கைதவறி கைகுழந்தை தீயில் விழ ! கை கொடுப்பாய் என்று அந்த தாயும் அழ ! எங்கோ அந்த பாபா கைகள் தீயில் வெந்தது ! இங்கே அந்த பிள்ளை நன்றாய் மீண்டு வந்தது ! (கேட்க) மண்விளக்கை ஏற்றிவைக்க எண்ணெய் இல்லை… என்றுசொன்ன வணிகர் சொல்லில் உண்மை இல்லை ! தண்ணீரிலே பாபா ஒரு தீபம் ஏற்றினார் ! கண்ணீரிலே அவர் உருக மாற்றிக் காட்டினார் ! (கேட்க)