May 2017

வலி தீர்க்க வரவேண்டும் !

வலி தீர்க்க வரவேண்டும் சாய்நாதனே ! – என் வலி தீர்க்க வரவேண்டுமே ! கதியிங்கு நீதானே என்றென்றுமே…! -நல் வழி காட்ட வரவேண்டும் வரவேண்டுமே !
சாயி லீலா !

கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் ! கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் ! சாயி லீலா…குரு சாயி லீலா ! ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல‌ ஓராயிரம் லீலை !
சாய் ஊர்வலம் !

மாவிலை… தோரணம்…வீதி எங்கும் ஆடிடும் ! பூவினைத் தூவியே மேகம் வாழ்த்துப் பாடிடும் ! பாரினை ஆளும் ஷீரடி ராஜன்… ஊர்வலம் வந்தான் !
"சாயி' என்றழைத்திடு

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– “சாயி’ என்றழைத்திடு ஷீரடியின் நாதனை ! சாய்ந்திடுமே வேரடியாய் சூழுகின்ற வேதனை ! தாயின் மனம், தண்மை குணம் கொண்ட அந்த தேவனின்… தாள் பணிந்து தண்டனிட தீண்டிடுமோ தீவினை ! (“சாயி’ என்றழைத்திடு ) ஆறுதலை அருளுகின்ற ஆண்டவனாம் சாயிராம் ! ஏழுலகம் ஆளுகின்ற வேந்தனவன் சாயிராம் ! எட்டு திக்கும் எதிரொலிக்கும் மந்திரமும் சாயிராம் ! ஏற்றம் தரும் வாழ்வளிப்பான் எங்கள்குரு சாயிராம் ! (“சாயி’ என்றழைத்திடு ) ஒன்பது நாள் வியாழனிலே நோன்பிருந்து வேண்டினால்… வேண்டியதைத் தந்திடுவான் வள்ளல்
எல்லாம் வல்ல‌ சிவனே !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– எல்லாம் வல்ல‌ சிவனே !…சிவனின் ரூபம் அவனே ! ​ஸ்ரீஜெயராமனும் அவனே ! கண்ணன் ஹரிமாதவனே ! ஜெய் ஜெய் சாயி பாபா ! – உன் பெயர் சொல்லி அழைத்தோம் வா! வா ! உன் அருட் பார்வை தா ! தா ! உன் அருட் பார்வை தா ! தா ! // துவாரகமாயி ! ஸ்ரீ ஜெய சாயி ! கருணை கற்பகமே ! அனல் உரு ஜோதி ! சத்குரு சாயி ! கலியுக அற்புதமே ! //
சாயி அருணோதயம்

ஆல்பம்: சர்வம் சாயி மயம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– அருணோதயம் ஆகின்றது ! ஆலய வாசல்கள் திறக்கின்றது ! கருணாகரன் சாயி தரிசனம் காண… கருணாகரன் சாயி தரிசனம் காண… கூட்டம் அலையாய் வருகின்றது ! கூட்டம் அலையாய் வருகின்றது ! (அருணோதயம் ) வேத மந்திரமும் ஓதிடவே ! நாத சுரம் இசை பாடிடவே … பறவைகள் ஆனந்த ஆர்ப்பரிக்க… மடந்தையர் பூஜைக்கு பூப்பறிக்க… திருவிழாக் கோலமே சன்னதியில் ! குரு சாயி நாதனின் சன்னதியில் ! (அருணோதயம் ) அபிஷேகம் நிறைவாய் நடந்திடவே… அலங்காரம் அழகினைச் சேர்த்திடவே… ஆரத்தி கண்டிட ஆனந்தமே
"சாயி ராமாயணம்"

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– “சாயி ராமாயணம்” என்னும் “சாய் சரித்திரம்”… அனுதினமும் செய்திடுவாய் பாராயணம் ! அல்லவைகள் ஓடி விடும் ! நல்லவைகள் நாடி வரும் ! அருள் பொழியும் குருவடியின் மகிமையினாலே ! மகிமையினாலே ! மகிமையினாலே ! மகிமையினாலே ! //சாய்ராம் லீலை பாடும் கீதம் ! கேட்டால் இனிக்கும் தேனாய் நாளும் !// (“சாயி ராமாயணம்” ) அருள் மணக்கும் வேதம்அது ! ப்ரணவம் போன்ற நாதம்அது ! இருள் நீக்கி ஒளி காட்டும்… திருவிளக்கைப் போன்றது ! சாயிராமின் லீலைகளை விருந்தெனவே படைப்பது
சாய் லீலை !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– வேப்ப மரத்தடியிலே தோன்றி வந்த வேந்தனே ! வேதனைகள் தீர்த்தருளும் வைத்யநாதனே ! கற்பகமே ! கண் கலங்கி மெய் சிலிர்க்கும்….! அற்புதமான உன் லீலைகளைக் கேட்டிடவே ! ——— ஈரேழு ஆண்டாக… கடும் வயிற்று வலியாலே… பெரும் இன்னல் உற்றாரே தத்தோபந்த் என்பாரும் ! ஈரேழு உலகாளும் சாயீசனே ! உன் திருக் கரத்தாலே… உதி தந்து வலி தீர்த்தாய் ! உன் மகிமை போற்றி ! போற்றி ! ———— ஊருக்குப் பொதுவான… தானியக் கிடங்கினிலே.. தீவிபத்து நிகழுமென முன்கூட்டியே அறிந்தாய்
பாண்டுரங்க சாய் !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. உன்னிகிருஷ்ணன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– பாண்டுரங்கன் கண்களிலேத் தெரியும் மின்னல் ஒளியை… உன்னிடமும் காணுகிறேன் சாயி நாதனே ! பாண்டுரங்கனும் நீயே ! பரந்தாமனும் நீயே ! பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் ! (பாண்டுரங்கன் கண்களிலே ) சாந்தமுடன் தோன்றுவான் ! – ருத்ர‌ தாண்டவமும் ஆடுவான் ! சாம்பலினை மேனியிலே பூசும் சர்வேஸ்வரன் ! சாயி பாபா உன்னிடமும் அவன் குணத்தைக் காண்கிறேன் ! சிவ சங்கரன் நீயே ! திரு மூர்த்தியும் நீயே ! ஹர ஹர சிவ சாய் ! ஜெய
அருள் என்னும் தேனூறும்

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– அருள் என்னும் தேனூறும் மகரந்தமே ! சாயி ! மலர்பாதமே ! பாபா ! மலர் பாதமே ! அருள் தேடும் அடியார்கள் திருக்கூட்டமே ! – அவன் பதம் நாடும் எப்போதும் வண்டாட்டமே ! (அருள் என்னும் தேனூறும் மகரந்தமே ! ) ஸ்ரீசாயி திருமாலின் அவதாரமே ! – அவன் அருட்பார்வை யால்தீரும் நம்பாவமே ! துணையாகும் ‘ஓம் சாயி’ எனும் நாமமே ! – எட்டுத் திசையாவும் ரீங்காரம் சாய் நாதமே ! (அருள் என்னும் தேனூறும் மகரந்தமே