நம்ம தல பிள்ளையாருதான் !

நம்ம தல பிள்ளையாருதான் !
Youtube-ல் கேட்க… ஆடி வருமே யானை தல ! – நம்ம‌ ஆசை பிள்ளை யாரு தல ! (2) நெஞ்சாற செஞ்சிடுவோம் வேண்டுதல – அவன் தன்னால தந்திடுவான் ஆறுதல…! (2) கோரஸ்: நம்ம தல பிள்ளையாருதான்..ஆன்..ஆன்..ஆன்.. அவனப் போல இல்லை யாருந்தான் (2) தேங்கா(ய்) ஒடைச்சா சூரையில ! – நம்ம‌ வாழ்வில் தருவான் மாறுதல…! (2) துண்டாஅது ஒடையுமந்த சத்தத்துல..- அவன் சந்தோசமா ஆயிடுவான் மொத்தத்துல…(2) கோரஸ்: நம்ம தல பிள்ளையாருதான்..ஆன்..ஆன்..ஆன்.. அவனப் போல இல்லை யாருந்தான் (2) ஊருக்கெல்லாம் மூத்த புள்ள ! – நம்ம‌ நகரத்தாரின் வீட்டுப் புள்ள ! (2) கற்பகமா தந்திடுவான் பேரருள..!…- நமைக் கண்ணாட்டம் காப்பானே தொல்ல இல்ல ! கோரஸ்: நம்ம தல பிள்ளையாருதான்..ஆன்..ஆன்..ஆன்.. அவனப் போல இல்லை யாருந்தான் (2) ஞானப் பழத்தக் கேட்டதில.. – அவன் தந்தான் நமக்கு பழனி மலை…! (2) அண்ணாமல சாமியோட செல்லப் புள்ள – நம்ம‌ அண்ணன்போல் வழிகாட்டும் நல்லபுள்ள ! (2) கோரஸ்: நம்ம தல பிள்ளையாருதான்..ஆன்..ஆன்..ஆன்.. அவனப் போல இல்லை யாருந்தான் (2) ஆல மரத்தின் அடியினில… – மலைக் கோட்டை மேல..உச்சியில…! சிம்மாசனம் தேவையில்ல ராஜாவப்போல – அவன் நம்மோட நெஞ்சோட கோயில் கொள்ள…! கோரஸ்: நம்ம தல பிள்ளையாருதான்..ஆன்..ஆன்..ஆன்.. அவனப் போல இல்லை யாருந்தான் (2)