அத்தி வரதா ! கோவிந்தா !

அத்தி வரதா ! கோவிந்தா !
வரங்களைத் தரவே வந்தவன் வரதன் ! அவன் பதம் பணிவோம் வாருங்கள் ! கேட்டதைக் கொடுக்கும் வரப்ரசாதி (2) கண்ணணாய் வந்த பார்த்த சாரதி (2) அத்தி வரதனே ! கோவிந்தா ! அம்புஜ பாதா ! கோவிந்தா ! (2) ப்ரம்ம தேவன் வடித்த அத்தி மர சிலையாக… ஐராவதம் மாறியதே அத்தி வன மலையாக… (2) வேகவதி வெள்ளத்தினை தடுத்திடும் அணையாக…(2) அனந்த சயனம் கொண்டான் அன்பரின் துணையாக…(2) அத்தி வரதா ! கோவிந்தா ! அம்புஜ பாதா ! கோவிந்தா ! (2) கண்களுக்குத் தெரியாமல் நீருக்குள்ளே இருந்தாலும் கண்ணாகக் காத்திடுவான் அத்தி வன வரதன் ! (2) நாற்பது ஆண்டுகள் பின் தந்தான் தரிசனமே ! (2) கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டிட பரவசமே (2) அத்தி வரதா ! கோவிந்தா ! அம்புஜ பாதா ! கோவிந்தா ! (2)