எங்கும் சாயி !

எங்கும் சாயி !
பல்லவி வைகறைப் பூக்களிலே… – எங்கள் சாய் முகம் தெரிகிறதே ! – ஒரு வேய்குழல் ஓசையிலே…- எங்கள் சாய் குரல் கேட்கிறதே ! (2) எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! (2) சாயிராம் !….சாயிராம் ! சரணம் – 1 காலையில் தோன்றி நாளெலாம் ஒளிரும் சூரியன் கதிரானான்…! (2) வானின் நீலம் என்றானான்…!! வாயுவும் ஆனான்…! (2) முகிலும் மழையும் சாயி ! – அந்தக் கடலும் நதியும் சாயி…! ஆனந்த ஸ்ரீ சாயி…! எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! (2) சாயிராம் !….சாயிராம் ! (வைகறைப் பூக்களிலே) சரணம் – 2 பூமியில் வாழும் ஆயிரம் கோடி.. உயிர்களின் உறவானான் ! காணக் கவரும் நிறமானான்…! காவ்யமாய் ஆனான்…! (2) அன்பும் அருளும் சாயி ! – புது இன்பம் எல்லாம் சாயி ! ஆனந்த ஸ்ரீ சாயி…! எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! (2) சாயிராம் !….சாயிராம் ! (வைகறைப் பூக்களிலே)