சாய் ராம நவமி !

சாய் ராம நவமி !
Youtube-ல் கேட்க பல்லவி தசரத ராம நவமி… ஷீரடி சாயி பவனி..! மத பேதமின்றி கூடி.. மகிழ்ச்சியில் திளைக்குது பூமி ! கோரஸ்: ரகுபதி ராகவ‌ ராஜாராம் ! குருவடி சரணம் சாய் பகவான் ! சரணம்-1 கோபால்ராவ் குந்த் என்பார்க்குக் கொஞ்சிட மழலை செல்வமதை பாபா அருளிட பக்தருமே கோலாகலமாய் கொண்டாட… நமக்கெலாம் கிடைத்ததோர் உற்சவமே ! சாய்குரு நாதன் அற்புதமே ! கோரஸ்: ரகுபதி ராகவ‌ ராஜாராம் ! குருவடி சரணம் சாய் பகவான் ! சரணம்-2 அல்லா ! அல்லா ! எனும் கோஷம் உரூஸ் என்னும் ஊர்வலத்தில்… எல்லாம் நீயே ஸ்ரீராமா.. உருக்கிடும் கோஷம் உற்சவத்தில்.. ஓர்வலமாய் இரு ஊர்வலமே…! ஷீரடி கண்டதோர் அதிசயமே ! கோரஸ்: ரகுபதி ராகவ‌ ராஜாராம் ! குருவடி சரணம் சாய் பகவான் ! சரணம்-3 அல்லா என்பதும் சாய்தானே ! அனந்த ராமனும் சாய்தானே ! எல்லாம் சாயி மயம்தானே ! எதிலும், என்றும் ஜெயம்தானே ! சாய்ராம் என்றே சொல்வோமே ! சஞ்சலம் இல்லை…காண்போமே ! ரகுபதி ராகவ‌ ராஜாராம் ! குருவடி சரணம் சாய் பகவான் !