காரடையான் நோன்பு – 2019

காரடையான் நோன்பு - 2019

மெட்டு: லட்சுமி ராவே மா…!
—————————————————-

அம்பா…வருவாய் எம் வீட்டுக்கு…!
சாவித்ரி நோன்புக்கு இன்று……(ஜகதம்பா)

கார் அரிசியும், காராமணியும்
சேர்த்து செய்த அடையோடு..(2)
உருகா வெண்ணையும் படைத்தோம் அம்மா…
உருகும் மனதால் அழைத்தோம் அம்மா… (2) (ஜகதம்பா)

நோன்புச் சரடில் பூக்கள் கட்டி..
பூஜை செய்து வேண்டுகிறோம் ! (2)
மாண்பு மிகும் எம் அம்பிகை உனது
ஆசியோடதனைப் பூணுகிறோம்…! (ஜகதம்பா)

மாண்ட உயிரினை மீண்டெழச் செய்த‌
சாவித்ரி தேவியை நினைத்தோமே ! (2)
நீண்ட ஆயுள் நல்கிட வேண்டும்…
என்நலம் போற்றும் என்னவர்க்கே நீ ! (அம்பா)

தீர்க்க சுமங்கலி வரமருள் செய்வாய் !
தீராப்பிணிகள் தீர்த்திடுவாய் !
ஏற்க வேண்டும் எங்கள் தாயே !
எல்லாம் நீயே ஆதரிப் பாயே ! (அம்பா)