ராம ராஜ்ய காவலன் !

ராம ராஜ்ய காவலன் !

Youtube link

ராம ராஜ்ய காவலன் !
ராம கார்ய சேவகன் !
நாமம் சொல்லி பாடுவோம்…
ஆஞ்சநேய சுவாமியை !

ராம ராம ராம ராம் !
ராம தூத அனுமராம் ! (2)

சரணம் – 1
———————
வானில் பறக்கும் வானரன் !
ஞானம் சிறக்கும் சூரியன் ! (2)

ராம நாம மகிமை தன்னை உணர்த்திடும் உதாரணன் !
தேவ தேவர் தொழுது பணியும் தேவன் பரிபூரணன் !

(ராம ராஜ்ய)

சரணம் – 2
———————
நாரதாதி முனிவரும்…
நாடுகின்ற நாயகன் ! (2)

வெண்ணை போல வெள்ளை உள்ளம் கொண்ட வெற்றித் திருமகன் !
தன்னை தினமும் வேண்டுவோர்க்கு உருகியருளும் உத்தமன் !