ஆஞ்சநேயர்

வருவாய் ! வருவாய் ! அனுமந்தா !

ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் மராத்தி அபங்கம் – தமிழ் பஜனை வடிவில் நாராயணன் என்ற பெயரிடப்பட்டவர், சமர்த்த ராமதாஸ், சந்த் ராமதாஸ், ராமதாஸ் ஸ்வாமி என்ற பெயர்களில் பிரபலமான மராட்டிய ராம பக்தர். வீர சிவாஜி காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது. ஸ்ரீ ராமர் மீதும், ஸ்ரீ ஆஞ்சநேயர் மீதும் நிறைய பாடல்கள் புனைந்துள்ளார் . “ஏயீ ! ஏயீ ! அனுமந்தா !” என்னும் அவரது பாடலின் தமிழாக்கமே இந்த பஜனை பாடல். தமிழாக்கம் / இசை: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: பத்ரி நாராயணன் Youtube link வருவாய் ! வருவாய் ! அனுமந்தா ! தாயாம் அஞ்சனை
அனுமனின் பலம்

Youtube Link Ragam: Revathy அனுமனின் பலமே வால் தானே ! – அதை அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2) அருள் மழை பொழியும் நிஜந் தானே ! அற்புத மாகிடும் நலம் தானே ! (2) அனுமனின் பலமே வால் தானே ! – அதை அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2) *** இராவணன் அவனுக்கு இணையாக   ஆசனம் செய்ததும் வால்தானே ! ஆணவம் கொண்டவர் தீமூட்ட..   இலங்கையை அதனால் எரித்தானே ! இராவணன் அவனுக்கு இணையாக   ஆசனம் செய்ததும் வால்தானே ! ஆணவம் கொண்டவர் தீமூட்ட..
hanuman

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் வென்றவன் ஸ்ரீ ஆஞ்சநேயன் ! மெட்டு: நீல வான ஓடையில்… (வாழ்வே மாயம்) ———————————————– ராம தூதன் மாருதி ! நாமம் போற்றி நீதுதி! பஞ்ச பூதம் யாவையும் வென்ற ஆஞ்ச நேயனாம் ! விடாமல் ராமன் பேர் சொல்லும்….(ராம தூதன்) விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே! –> (ஆகாயம்) சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே ! விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே! சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே ! ஆழ்கடல் மீதிலே… பாலமும் செய்தவன் ! –> (நீர்)
பஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் !

பஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் ! அஞ்சனை தவப்புதல்வன் ! அன்பரின் முழு முதல்வன் ! (பஞ்ச பூதங்களையும்) ஆகாயம் —————— நெஞ்சிலே வீரமுடன்…விண்ணிலே தாவியவன் ! பந்தெனப் பகலவனைப் பிடித்தவன் தானன்றோ ! (பஞ்ச பூதங்களையும்) நீர் ——– அலையாடும் கடல்மீது மலைக்கல்லால் ஒருபாலம் மலைக்காமல் செய்தானே ! கடல் தாண்டி சென்றானே ! (பஞ்ச பூதங்களையும்) காற்று ————- திசைமாற்றும் பெருங்காற்றின் விசைமீறி எதிர் சென்று… சஞ்சாரம் செய்கின்ற‌ அவதாரம் அவனன்றோ ! (பஞ்ச பூதங்களையும்) நெருப்பு ————– அஞ்ஞானத் தீயர் சிலர் மெய்ஞ்ஞான சின்னமான… வால்மீது தீவைத்து தான் தீய்ந்து போனாரே ! (பஞ்ச