திருப்பட்டூர் ப்ரம்மா !

tirupattur-brahma

தலைவிதியை எழுதுகின்ற ப்ரம்மதேவன்..!
‘தலையாயன் தான்’ என்ற தலைக்கனம் கொண்டான்…! (2)

அவன் செருக்கை நீக்கிடவே
சிவன் அவன் தலை கொய்தான்..!

அவன் செருக்கை நீக்கிடவே
சிவன் அவன் தலை கொய்தான்..!

சரணம் -1

தவறுணர்ந்த ப்ரம்மனும்
தவவழியைத் தேடி…

சிவ பூஜை செய்திடவே…
திருப்பட்டூர் வந்தான் !

ஈராறு சிவலிங்கம்
ப்ரதிஷ்டையும் செய்தான்…! – தினம்

மாறாத பக்தியுடன்
பூஜையும் செய்தான் !

(தலைவிதியை எழுதுகின்ற ப்ரம்மதேவன்..! )

சரணம் – 2

மனமிரங்கி சங்கரனும்…
வரங்களை வழங்க…!

குணவதியாம் பார்வதியும்..
அகமுவந்து அருள…!

நான்முகனாய் ப்ரம்மனுமே
ஆலயம் கொண்டான் ! – தனை

வேண்டுபவர் விதிமாற்றி
வாழ்த்தவும் செய்தான்…!

(தலைவிதியை எழுதுகின்ற ப்ரம்மதேவன்..! )