தென்திசைக் கடவுளே !

தென்திசைக் கடவுளே !

See the Song video in my Facebook page and my Youtube Channel

தென்திசைக் கடவுளே ! தட்சிணாமூர்த்தியே !
தென்றலாய் உலவிடும் உலகிலுன் கீர்த்தியே ! (2)
மோன வடிவான ஞான தேவனே !
மோட்சம் அருளும் சிவ ரூபனே !
கானம் பாடிஉன் நாமம் போற்றுவோம்
காக்க வேணும் எம் ஈசனே!

கோரஸ்:
ஞானப் பழம் வழங்கும் தருவே போற்றி !
ஞாலம் அதுவணங்கும் குருவே போற்றி ! (2)

சரணம் – 1

வேதப் பொருள் விளக்கி
சனகாதி முனியோர்க்கு..
போதனை செய்தவரே ! ஆதி சிவ குருவே ! (2)
ஆல மரத்தடியில்…அறிவின் விழுதுகளை…(2)
செறிவாய் தழைத்தவரே ! யோக தவ வடிவே !

கோரஸ்:
ஞானப் பழம் வழங்கும் தருவே போற்றி !
ஞாலம் அதுவணங்கும் குருவே போற்றி ! (2)

தூய வெண்ணிறமாய்
மிளிர்ந்திடும் திருமேனி !
முயலகன் எனும் அரக்கன் அடங்கிய திருவடி…! (2)
ஆய கலைகூறும் ஞான நூல் ஏந்தி…
சின்மயம் தனைக்காட்டும் சீல ஸ்ரீ குருவே !

கோரஸ்:
ஞானப் பழம் வழங்கும் தருவே போற்றி !
ஞாலம் அதுவணங்கும் குருவே போற்றி ! (2)