பாத யாத்திர ! பழனி யாத்திர

பாடலை பார்க்க/கேட்க‌<—

பாத யாத்திர ! பழனி யாத்திர…!
வாரோமே ! வாரோமே ! உன் முகத்தை பார்த்திடவே முருகா ! (2)
அட மயிலில் நீபறக்க…
மலையில் நீஇருக்க…
மைல்கணக்கா நடந்துவாரோம் முருகா ! (2)
காலில் வலியுமில்ல…
வீட்டுக் கவலையில்ல..
காலார நடந்துவர்றோம் முருகா ! (2)

கோரஸ்:
சக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் !
வெற்றிவேல் கொடுக்கட்டும் வெற்றி எமக்குத்தான் ! (2)

காவி கட்டிட்டு…நீறு பூசிட்டு…
வாராமே ! வாராமே ! எட்டு வெச்சு உன் மலையைத் தேடி ! (2)
அட நெஞ்சில் உன்நினைப்பு
பாக்க பரிதவிப்பு…!
இப்பொழுதே பாக்க வாரோம் நாங்க ! (2)
உன் பேரே முணுமுணுப்பு…
வாயில் அது இனிப்பு…
வழித்துணையா வருவதும் உன்வேலே ! (2)

கோரஸ்:
சக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் !
வெற்றிவேல் கொடுக்கடடும் வெற்றி எமக்குத்தான் ! (2)

வீதி எல்லாமும்…பாதை எல்லாமே…
திருநீறு வாசம்தான்..! சுத்தி வரும் காத்தில்வரும் முருகா ! (2)
அந்த வாசம் நீ எமக்கு..
வைக்கும் வரவேற்பு…
எங்களையும் கூப்பிட்டது நீதானே ! (2)
உன் பாசம் அதுஇருக்கு
வேற எமக்கெதுக்கு?
உன் பாசக்கார புள்ளையய்யா நாங்க ! (2)

கோரஸ்:
சக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் !
வெற்றிவேல் கொடுக்கடடும் வெற்றி எமக்குத்தான் ! (2)

ஞானப் பழம்வாங்க..வானவழியாக…
மயிலேறி போனாயே ! மின்னலென பூமி சுத்த நீயே ! (2)
அங்க கலகம் ஆனதுல..
கோபம் வந்ததில…
இங்க வந்து நின்னுபுட்ட நீதானே ! (2)
நீயே ஞானப்பழம்..!
ஆனாய் பழனியில..
உன்ன வந்து பாக்க வாரோம் நாங்க ! (2)

கோரஸ்:
சக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் !
வெற்றிவேல் கொடுக்கடடும் வெற்றி எமக்குத்தான் ! (2)

ஆறு முகம்யாவும் தாயின் முகமாகும்…
கண்மூடும் போதெல்லாம் முன்னவந்து நிக்குதய்யா தானா ! (2)
அட..தாயா நீயிருக்க…
தயவா காத்திருக்க…
வந்துபுட்டோம்..! வந்துபுட்டோம் ! நடை போட்டு ! (2)
நேரில் பார்த்திடணும் !
நேசம் காட்டிடணும்..!
இன்னும் கொஞ்ச தூரந்தானே முருகா ! (2)

கோரஸ்:
சக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் !
வெற்றிவேல் கொடுக்கடடும் வெற்றி எமக்குத்தான் ! (2)