யூட்யூப் காணொலிகள்

வேலுண்டு !  பயம் இல்லை !

பாடலை பார்க்க/கேட்க‌<— வேலுண்டு ! மயிலும் உண்டு ! வேலோனின் துணையும் உண்டு ! ஏதும் பயம் இல்லையே ! எல்லாம் ஜெய மாகுமே ! (2) கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே ! கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2) கோரஸ்: கந்த வடிவேலனே ! செந்தில் குருநாதனே ! மதியுண்டு ! மனமும் உண்டு ! மதிபோன்ற முகமும் உண்டு ! முருகன் அருள் போதுமே ! கருணை மழை யாகுமே ! (2) கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே ! கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2) கோரஸ்: கந்த வடிவேலனே ! செந்தில் குருநாதனே !
காவடியை தூக்கி ஆடுவோம்

பாடலை பார்க்க/கேட்க‌<— காவடியை தூக்கி ஆடுவோம் ! -வேண்டிக்கொண்டுநாம் வேலவனின் காலடியை நாடிச் செல்லுவோம்! (2) சின்ன சின்ன காவடி ! வண்ண வண்ண காவடி ! சிங்கார வேலன் காவடி ! (2) குன் றெல்லாம் நின் றாடும் நம்ம குமரனுக்கு கும்மாளம் கொண்டாட்டம் தரும் காவடியே ! (2) கோரஸ்: வெற்றிவேல் வேல் வேல் ! வேல்முருகா ! வீரவேல் வேல் வேல் ! வேல்முருகா ! (2) அங்குமிங்கும் எங்கும் காவடி ! – அழகுவேலனின் மலையச் சுத்தி கூத்தாடும் முத்துக் காவடி ! (2) ஆட்டம் ஆடும் காவடி ! ஆண்டியப்பன் காவடி
பாத யாத்திர ! பழனி யாத்திர

பாடலை பார்க்க/கேட்க‌<— பாத யாத்திர ! பழனி யாத்திர…! வாரோமே ! வாரோமே ! உன் முகத்தை பார்த்திடவே முருகா ! (2) அட மயிலில் நீபறக்க… மலையில் நீஇருக்க… மைல்கணக்கா நடந்துவாரோம் முருகா ! (2) காலில் வலியுமில்ல… வீட்டுக் கவலையில்ல.. காலார நடந்துவர்றோம் முருகா ! (2) கோரஸ்: சக்திவேல் கொடுக்கட்டும் சக்தி எமக்குத்தான் ! வெற்றிவேல் கொடுக்கட்டும் வெற்றி எமக்குத்தான் ! (2) காவி கட்டிட்டு…நீறு பூசிட்டு… வாராமே ! வாராமே ! எட்டு வெச்சு உன் மலையைத் தேடி ! (2) அட நெஞ்சில் உன்நினைப்பு பாக்க பரிதவிப்பு…! இப்பொழுதே பாக்க வாரோம்