சாயி கார்த்திகை !

சாயி கார்த்திகை !
மெட்டு: எங்கள் வீட்டில் எல்லா நாளும் படம்: வானத்தைப்போல… ——————————————————————————– த்வாரக மாயி கோயிலில் என்றும் கார்த்திகை ! ஒளிர்ந்திடும் எங்கும் எங்கள் சாயி புன்னகை ! த்வாரக மாயி கோயிலில் என்றும் கார்த்திகை ! ஒளிர்ந்திடும் எங்கும் எங்கள் சாயி புன்னகை ! மனக் கோட்டையின் இருள் நீக்கியே ஒளி காட்டும் ஆலயம்…ஷீரடி ஆலயம் ! (த்வாரக மாயி) தீபம் ஏற்ற‌ எண்ணெயில்லை..! சாய்குரு விந்தையை கேளுங்கள் ! தண்ணீர் விட்டு ஏற்றினான்..எரிந்தது தீபம் பாருங்கள் ! வினைகளெலாம் அதில் எரியும் ! ஆனந்த தீபம் பாருங்கள் ! மனம் தெளிந்து வழி தெரியும் ! மங்கல தீபம் பாருங்கள் ! ஒளி ரூபமாய் சாய் தோன்றுவான் ! அட அங்கே பாருங்கள்… சாயி ஜோதியே ! (த்வாரக மாயி) துனியை தினமும் வளர்த்தானே ! உதியை அதிலே படைத்தானே ! உள்ளக் கவலை யாவையும் துனியில் போட்டுச் செல்வோமே ! பணிவுடனே சொல்லிடுவோம்…பக்தியில் அவனது நாமமே… பரிவுடனே காத்திடுவான்…பாடிடு வோமவன் கீதமே ! ஸ்ரீ சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !எனச் சொல்லியே ஏற்றுவோம்… நாளும் தீபமே ! (த்வாரக மாயி)