வாங்க ! வாங்க ! யாத்திரைபோவோம்

வாங்க ! வாங்க ! யாத்திரைபோவோம்

பாடலை பார்க்க/கேட்க‌<—

வாங்க ! வாங்க ! யாத்திரைபோவோம் !
வாழ்வ மாத்தும் ஐயன் மலை ! (2)
மலைச்சு நிக்கத் தேவையில்லை வாருங்க ! அட வாருங்க ! வந்து சேருங்க ! – நம்ம‌
அழைச்சுபோக அவன்வருவான் பாருங்க ! (2)
தொலைச்சிடலாம் தொல்லைகளை பாருங்க ! அட கேளுங்க ! வந்து பாருங்க ! – நம்ம‌
நெலமயதும் உயர்ந்திடமே பாருங்க ! (2)

மாசம் ! மாசம் ! கார்த்திகை மாசம் !
மாலை போடும் நன்நேரம்தான் ! (2)
ஐயப்பனின் துளசிமணி மாலைங்க ! மணி மாலைங்க…! – அத போடுங்க ! – அத‌
போட்டு ஐயன் பூசையில பாடுங்க ! (2)
குருசாமி ஆசியோட மாலைங்க ! மணி மாலைங்க…! – அத போடுங்க ! – அது
துணையாகும் கவசமென ஆகுங்க ! (2)

நோன்பு ! நோன்பு ! நாமிருப்போமே !
ஆறு வாரம் உற்சாகமா..(2)
தீராத நோய்விலகிப் போகுங்க ! அதப் பாருங்க…! – இதக் கேளுங்க ! – அந்த‌
நோன்பு புதுத் தெம்புதரும் பாருங்க ! (2)
மாறாத பக்தியுடன் பாடுங்க ! தினம் பாடுங்க…! – இதக் கேளுங்க ! – இந்த‌
நோன்பிருந்தா புண்ணியமும் கூடுங்க ! (2)

கோஷம் ! கோஷம் ! நாம்போடும் கோஷம் !
கேட்கும் எட்டு திசையாவிலும் ! (2)
சரணமப்பா சொல்லி நடை போடுங்க ! அவன் வீடுங்க ! அத சேருங்க ! – அவன்
சரணத்தில மனம்குளிரும் சாமிங்க !
சாமியப்பா சொல்லிக் கிட்டு ஏறுங்க ! மலை ஏறுங்க ! அட பாருங்க ! – அந்த‌
கோஷத்தில ஏறும்பலம் கூடுங்க ! (2)

வாசம் ! வாசம் ! காடெல்லாம் வாசம் !
வீசும் காத்தில் சந்தனமா ! (2)
பந்தளத்து ராசன் மலைக் காடுங்க…! இது பாருங்க ! அட கேளுங்க ! – அவன்
சந்தனத்தில் நனைஞ்சிருப்பான் பாருங்க ! (2)
திந்தகத்தோம் சொல்லிகிட்டு ஆடுங்க..! நல்லா ஆடுங்க ! இத கேளுங்க ! – அவன்
சன்னதியில் வந்தனத்த சொல்லுங்க‌ ! (2)

சூடம் ! சூடம் ! நாம்காட்டுவோமே !
சூதும் வாதும் எரிந்தோடவே ! (2)
கற்பூர தரிசனமே காணுங்க ! ஐயன் மேனிங்க ! அதில் மின்னுங்க ! – அந்த‌
தரிசனத்தில் மனம் குளிரும் பாருங்க !
அற்புதமாய் தோன்றுமொரு காட்சிங்க ! அதப் பாருங்க ! கண் சேருங்க ! – அதில்
ஐயப்பனின் அருள்ஜொலிக்கும் பாருங்க !

ஜோதி ! ஜோதி ! ஆனந்த ஜோதி !
காண்போம் வாங்க காந்தமலை ! (2)
ஐயப்பனை ஒளிமயமாய் பாருங்க ! வரம் கேளுங்க ! நலம் கூடுங்க ! – இந்த‌
கலியுகத்தில் அவனவிட்டா யாருங்க? (2)
ஒளிகாட்டும் மகர தீபாம் பாருங்க ! ஒன்னா கூடுங்க ! புகழ் பாடுங்க ! – மலை
சரணமப்பா எதிரொலிக்கும் கேளுங்க ! (2)