பொன்னு பதினெட்டு படி !

பொன்னு பதினெட்டு படி !

பாடலை பார்க்க/கேட்க‌<—

சாமி ஐயப்பா ! சரணம் ஐயப்பா !
சொல்வோமே ! செல்வோமே ! பொன்னுபதி னெட்டு படி ஏறி ! (2)
அட ஆமாம் பொன்னு படி !
ஐயன் மின்னும் அடி…
நம்மையெலாம் சேர்த்துவிடும் தானே ! (2)
நமைப் பூவா பார்த்தபடி…
தோதா ஏத்தும் படி
ஐயனிடம் சேர்த்துவிடும் தானே ! (2)

கோரஸ்:
ஐயப்பா ஐயப்பா ! சாமி ஐயப்பா !
ஐயப்பா ஐயப்பா ! சரணம் ஐயப்பா !

மாசம் வந்தாச்சு ! மாலை போட்டாச்சு !
மாமலை.. செல்வோமே ! பொன்னுபதி னெட்டு படி ஏறி ! (2)
மாறா பக்தி கொடி..
வேரா பூத்தபடி…
மெல்ல அடி எட்டுவைத்து நாமே ! (2)
நமை மேலே ஏத்தும் படி
வாழ்வில் நல்ல வழி..
தந்துவிடும் நல்ல படிதானே ! (2)

கோரஸ்:
ஐயப்பா ஐயப்பா ! சாமி ஐயப்பா !
ஐயப்பா ஐயப்பா ! சரணம் ஐயப்பா ! (2)

ஆனை முகந்தம்பி! ஆறு முகந்தம்பி !
சாஸ்தாவ பார்ப்போமே…பொன்னுபதி னெட்டு படி ஏறி ! (2)
வானை முட்டும் படி
கோஷம் போட்ட படி
நல்லபடி ஏறிடுவோம் நாமே ! (2)
தேவை உள்ளபடி
தருமே ஐயன் அடி !
உள்ளபடி நல்லபடி தானே ! (2)

கோரஸ்:
ஐயப்பா ஐயப்பா ! சாமி ஐயப்பா !
ஐயப்பா ஐயப்பா ! சரணம் ஐயப்பா ! (2)

பாலால் அபிசேகம் ! தேனால் அபிசேகம் !
பார்ப்போமே ! மலைமேல…பொன்னுபதி னெட்டு படி ஏறி ! (2)
பேரு கூடும் படி..!
சீரும் கூடும் படி..!
செய்யும் படி ஏறிடுவோம் நாமே ! (2)
நாலும் சேரும் படி..
ஞானம் ஏறும் படி…
செய்யும் படி ஏறிடுவோம் நாமே ! (2)

கோரஸ்:
ஐயப்பா ஐயப்பா ! சாமி ஐயப்பா !
ஐயப்பா ஐயப்பா ! சரணம் ஐயப்பா ! (2)