பேதமிலா ஐயப்பன்

பேதமிலா ஐயப்பன்

பாடலை பார்க்க/கேட்க‌<—
சாஸ்தா வாழுகிற சன்னிதானமே !
ஏற்ற தாழ்வுஇலா சரணாலயமே ! (2)

வாபருக்கும் கோயில் ! -வி
நாயகர்க்கும் கோயில் !
பேதமுன்னு ஏதும் இல்ல ! (2)
சாஸ்தா வாழுகிற சன்னிதானமே !
ஏற்ற தாழ்வுஇலா சரணாலயமே ! (2)

கோரஸ்:
ஏகாந்த மூர்த்தியே சாமி ஐயப்பா !
ஓங்கார ரூபனே சரணம் ஐயப்பா ! (2)

ஏழை பாழைஎன்ன எளியவன் என்ன?
கோடி பணமிருக்கும் ராஜனும் என்ன? (2)
எல்லாருமே ஒன்னே ! – நம்
ஐயப்பனின் முன்னே !
கேட்டா தந்திடுவான் ! (2)
ஏழை பாழைஎன்ன எளியவன் என்ன?
கோடி பணமிருக்கும் ராஜனும் என்ன? (2)

கோரஸ்:
ஆனந்த ஜோதியே சாமி ஐயப்பா !
ஆரியங்கா நாதனே சரணம் ஐயப்பா ! (2)

காட்டு மேட்டுவழி சரிசமமாகும் !
வாழ்க்கை தத்துவமும் அதுவென ஆகும் ! (2)
ஏத்திவிடும் சாமி ! – நமை
தூக்கிவிடும் சாமி !
ஞான வழி காட்டுவான் ! (2)
காட்டு மேட்டுவழி சரிசமமாகும் !
வாழ்க்கை தத்துவமும் அதுவென ஆகும் ! (2)

கோரஸ்:
தேவாதி தேவனே ! சாமி ஐயப்பா !
தேனாபிசேகனே ! சரணம் ஐயப்பா ! (2)

தேவை காசுபணம் ஏதுமில்லைங்க !
தேங்காய் நெய்தேங்காய் அவனுக்கு போதும் ! (2)
ராஜாவீட்டுப் பிள்ளை !
எளிமையோட எல்லை !
ராஜன் மகராஜனே ! (2)
தேவை காசுபணம் ஏதுமில்லைங்க !
தேங்காய் நெய்தேங்காய் அவனுக்கு போதும் ! (2)

கோரஸ்:
ஈஸ்வரன் பாதமே சாமி ஐயப்பா !
ஈஸ்வரி பாதமே சரணம் ஐயப்பா ! (2)