சரணம் சொல்லி சபரி செல்வோம் !

சரணம் சொல்லி சபரி செல்வோம் !

பாடலை பார்க்க/கேட்க‌<—

சாமி சரணமென சொன்னால் – மன‌
சஞ்சலம் விலகிடும் அந்நாள் ! (2)
சாய்ந்திடும் வேராய்… மாய்ந்திடும் கவலை! சபரி நாதனே சரணம் ! (2)
ஒருவாய், பணிவாய், அழகாய், கனிவாய்
ஒருதரம் சரணம் சொன்னால்…
இருளது ஓடும் ! அருள்மழை யாகும் !
பெருமை யாவுமே சேரும் !

மாலை போட்டுதினம் பூஜை.. – அதைச்
செய்திடு வோமிரு வேளை ! (2)
காலையும் அவனே ! மாலையும் அவனே ! சபரி வாசனே நாளும் ! (2)
பொலியும் முகமாய்… புலியில் வருவான் !
புவியினை ஆளும் நேசன் !
கலிதீர்த் திடுவான் ! களிப் பூட்டிடுவான் !
கருணை யோடவன் தருவான் ! (2)

காடு மேடுவழிப் பாதை…- பூக்
கம்பளம் விரித்த மேடை ! (2)
பாடிடுவோமே ! ஆடிடுவோமே ! சரண கோஷமே போட்டு…! (2)
ஹரியின் மகனே ! ஹரனின் மகனே !
ஹரிஹரசுதனாம் ஐயன் !
உடன் துணை வருவான் ! உடல்நலம் தருவான் !
உயர ஏற்றியே விடுவான் ! (2)

பாவம் தீர்த்துவிடும் பம்பை ! – அது
புண்ணியம் சேர்த்திடும் கங்கை !
குளித்திடுவோமே ! சிலிர்த்திடுவோமே ! வினைகள் யாவையும் நீங்க ! (2)
நதியின் கரையில் நலங்கள் தருவான்
கணநா யகனாம் அண்ணன் !
உடைகிற தேங்காய்…தடையினை நீக்க..
நடையில் கூடுமே வேகம் ! (2)

மேன்மை யானத் திருப்படிகள் ! – அவை
ஐயனைக் காட்டிடும் அடிகள் ! (2)
ஏறிடுவோமே ! சேர்ந்திடுவோமே ! சபரி நாதன்பொன் னடியை ! (2)
குருவாய், திருவாய், உறவாய் இருப்பான்
அருமறைப் பொருளாம் ஐயன் !
அவன்தரி சனத்தால் நம்திரு உளத்தில்
அமைதி கூடுமே என்றும் !