கணபதி கீர்த்தனை

கணபதி கீர்த்தனை

ராகம்: தோடி

பல்லவி
——————
காலனையும் கெலித்திடுவேன் !
காரணம் நான் உன்னடியான்…!
கணபதியே ! கணபதியே !
(காலனையும்)

அனுபல்லவி
———————-
ஜாலம் செய்யும் அரக்கர்களைக்
காலடியில் கிடத்தியவா !
உன் துணையே துயர் நீக்கும்…!
இணையடிகள் பிடித்திட்டேன் !
(காலனையும்)

சரணம்
————–
நீலகண்டன் சக்தியையும்
வலம் வந்து கனி பெற்றாய் !
வேழ முக ஆண்டவனே !
சேவற் கொடியான்..
மூத்தவனே ! உன் புகழ்..
கானம் நான் பாடுவதால்..
(காலனையும்)