முருகா ! முருகா !

முருகா ! முருகா !
உயிரே உயிரே என்ற பம்பாய் திரைப்பட பாடலின் மெட்டில்
—————————————————–

முருகா முருகா நீயும் என் முன்னே வருவாயோ
அழகா அழகாய் வ ந்து உன்னருளைத் தருவாயோ
குயிலாய் இரு ந்தால் நானும் ஓம் என்று கூவிடுவேன்
மயிலாய் இரு ந்தால் நானும் உனைத் தாங்கி ஓடிடுவேன்

(முருகா)

உனை நெஞ்சில் நிறுத்தி ஓம் என்று சொன்னால்
வினையெதும் வ ந்திடுமா?
துணை என்றே உன்னைத் திடமாக கொண்டால்
 நோவேதும் வ ந்திடுமா?
ஆறு படை வீடு தனை ஆளும் ஆன்டவன் அருளால்
பேரின்பம் பேரின்பமே..
பேறு பதினாறும் குறைவின்றிப் பெறவேண்டும் என்றால்
பேராளன் துணை வேண்டுமே

குமரா குமரா எனச் சொன்னாலே தித்திக்கின்றதே !

(முருகா முருகா)

திருச்செந்தூர் சென்றால் திருமுருகன் ஆட்சி
தெய்வீகம் தெய்வீகமே
திருப்பரங் குன்றத்தில் குருபரன் காட்சி
தேவாம்சம் தேவாம்சமே
சுவாமி மலை மீது உனைக் காண தினம் கூடும் அடியார்
திருக்கூட்டம் திருக்கூட்டமே
பழ முதிர்சோலை திருத்தணிகை தலங்ளில் உந்தன்
எழிற் கோலம் எழிற் கோலமே !

பழனி பழம் நீ..அவ்வை தமிழ் பாட வைத்தவன் நீ !

(முருகா)