பாக்யதா லட்சுமி தமிழில்

பாக்யதா லட்சுமி தமிழில்

 

அதிர்ஷ்டங்கள் தரும் திருவே ! வாருமம்மா !

அதிர்ஷ்டங்கள் தரும் திருவே ! வாருமம்மா !

எம் அம்மா நீ நல்…

செல்வங்கள் தரும் திருவே ! வாருமம்மா !

எம் அம்மா நீ நல்…

அதிர்ஷ்டங்கள் தரும் திருவே ! வாருமம்மா !

 

Charanam

————–

மெல்லடி வைத்து மெதுவாய் நடக்க..

“ஜல்ஜல்” என்றே கொலுசுகள் ஒலிக்க

நல்லவர் செய்திடும் பூஜையின் போது..

தயிரினைக் கடைந்திட வரும்வெண் ணெய்போல்

 

(அதிர்ஷ்டங்கள் )

 

கரங்களால் பொன்மழை பொழிந்திடு தாயே !

வரங்களாய் விரும்பிடும் பொருள் தருவாயே !

தினமெழு சூரியன் கோடியின் ஒளியாய்

ஜனகனின் மகள்நீ சடுதியில் வாராய் !

 

(அதிர்ஷ்டங்கள் )

 

 

தங்கிட பக்தரின் மனைநீ வந்தால்

பொங்கிடும் மங்கலம் ஆனந்தம் தினமும் !

சத்தியம் பேசிடும் சான்றோர் மனதில்

கட்டிய ஆலயம் அதிலுறை செய்யும்..

 

(அதிர்ஷ்டங்கள் )

 

அளவில் அடங்கா செல்வம் அருளும்

வளையல் அணிந்த வலக்கை காட்டி

குங்குமம் சூடியே மலர்விழி யாளே !

வெங்கட ரமணனின் மனம்கவர் ராணியே !

 

(அதிர்ஷ்டங்கள் )

 

 

பொங்கியே நெய்யுடன், சர்க்கரை ஓடும்

மங்கல வெள்ளிக் கிழமை பூஜையில்

வந்தனை செய்தே புரந்தரன் பாடும்

சுந்தர அளகரி ரங்கனின் ராணியே !

 

(அதிர்ஷ்டங்கள் )