ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா

ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா

ஐவர்பாடியில் ஆட்சி செய்கிறாய்
ப்ரத்யங்கிரா தேவி..
பௌர்ணமி நிலவாய் காட்சி தருகிறாய்
அமாவாசை இரவில்…(2)

சிங்க முகம் கொண்ட மேனியிலே
தங்க மனம் கொண்டு வந்தாய் (2)

எங்கள் குறைதீர்த்து வாழ்விலே
மங்கலங்களே தந்தாய் !

கோரஸ்:
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா !
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ! (2)

Charanam 1
—————–
“காரம்” குணம் கொண்ட மிளகாயால்
யாகம் செய்கின்ற போதும்…
கமரல் இல்லாமல் அதைஏற்கும்
அதிசயம் போலிலை ஏதும்…(2)

உக்ர நரசிம்மர் உச்ச கோபத்தை
தணிக்க வந்தவள் நீயே ! (2)
உக்ரம் ஏற்றுமோ மூட்டை மூட்டையாய்
மிளகாய் கொட்டியும் தாயே? (2)

கோரஸ்:
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா !
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ! (2)

Charanam 2
—————–

பாண்டவர் ஐவரும் தேவிஉனை
பணிந்து போற்றியே துதி பாடி…
வேண்டியதாலே போரினிலே
நாட்டினாரே வெற்றிக் கொடி (2)

பரம சிவனாரின் சரப ரூபத்தில்
சிறகில் தோன்றினாய் நீயே ! (2)
பதங்கள் தொழுவாரை வாழ்வில்
வெற்றியில் பறந்திட செய்திடு வாயே ! (2)

கோரஸ்:
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா !
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ! (2)

ஐவர்பாடியில் ஆட்சி செய்கிறாய்
ப்ரத்யங்கிரா தேவி..
பௌர்ணமி நிலவாய் காட்சி தருகிறாய்
அமாவாசை இரவில்..

சிங்க முகம் கொண்ட மேனியிலே
தங்க மனம் கொண்டு வந்தாய்

எங்கள் குறைதீர்த்து வாழ்விலே
மங்கலங்களே தந்தாய் !

கோரஸ்:
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா !
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ! (2)