அன்பென்றால் சாயி !

அன்பென்றால் சாயி !

சாய்நாதன் மீது விசுவாசம் கொண்டு…கண்ணான கண்ணே ! கண்ணான கண்ணே ! மெட்டில் பாடலாம் !
*******************
Youtube-ல் கேட்க
அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி !
எல்லாமே சாயி ராம் !
என்னோடு என்றும் கைகோர்த்து வந்து
துணையாகும் சாயி ராம் !

சாய் என்றால் அன்பு…
சாய் என்றால் தெம்பு ..
எப்போதும் சாயி ராம் !

சாய் என்றால் இன்பம்
தானாகப் பொங்கும்..
தாய் ஆவான் சாயி ராம் !

நெஞ்சோடு கோயில் கொண்டு
அஞ்சேல் என்று…
சொன்னானே சாயி ராம் !

ஓம் சாயி ! ராம் ! ராம் ! ராம் ! ராம் ! ராம் ! ராம் !
ஷீரடி சாயிராம் !

ஓம் சாயி ! ராம் ! ராம் ! ராம் ! ராம் ! ராம் ! ராம் !
ஜெய் சாயி ராம் ! ராம் !

ஓம் சாயி ! ராம் ! ராம் ! ராம் ! ராம் ! ராம் ! ராம் !
ஷீரடி சாயிராம் !

ஓம் சாயி ! ராம் ! ராம் ! ராம் ! ராம் ! ராம் ! ராம் !
ஜெய் சாயி ராம் ! ராம் !

அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி !
எல்லாமே சாயி ராம் !
என்னோடு என்றும் கைகோர்த்து வந்து
துணையாகும் சாயி ராம் !

அலைந்திடும் என் மனது
தளர்ந்திருக்கும் பொழுது
அமைதியினைப் பெறுமே
பார்க்கும் போதே !

குருமுகத்தில் தோன்றும்
குறுநகையைக் கண்டால்
மறுநொடியே சாந்தம் !
மனதோ டாகும் !

அன்போடும் பண்போடும் பாபா
எனப் பாடும் அடியார்க்கு..
எந்நாளும் நிழலாகி
வருவான் எப் போதும்…!
அது போதும்…

சாய் லீலை கேட்கவே…
உடன் சிலிர்த்துப் போகுமே!
புது உற்சாகம் தோன்றும்…
பூக்கும் உள்ளம் சொர்க்கம் ஆகுமே !

( அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி ! )