கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !
அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !
அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !
வசுதேவர் பிள்ளையாம் பாலகிருஷ்ணன்…
பசுக்களை மேய்த்த கோபாலகிருஷ்ணன் (2)
வெண்ணையைத் தின்றவன் நவநீதகிருஷ்ணன் !
வேங்கடமலை நின்ற வெங்கடகிருஷ்ணன் (2)
(கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !)
கோகுலம் கொஞ்சிய கோகுலகிருஷ்ணன்
கோபியர் கெஞ்சிய கோபிகிருஷ்ணன் (2)
பேதையர் மனம்கவர் மோகனகிருஷ்ணன்
ராதா சமேத ஸ்ரீராதாகிருஷ்ணன் ! (2)
(கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !)
மயக்கும் குழலூதும் முரளிகிருஷ்ணன் !
மயிலிற காடிடும் மயூரகிருஷ்ணன் !
மலைதூக்கி குடைசெய்த லீலாகிருஷ்ணன் !
மாலவன் வடிவான ஸ்ரீஹரிகிருஷ்ணன் !
(கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !)
அழகான வான்வண்ண நீலகிருஷ்ணன் !
அந்தமிலா தவன் அனந்தகிருஷ்ணன் !
வெற்றியைத் தருபவன் விஜயகிருஷ்ணன் !
ஜெய் ! ஜெய் ! ஜெய் ! ஜெய் ! ஸ்ரீ ஜெயகிருஷ்ணன் !
(கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !)