ஆடி மாசம் அம்மனோட மாசம் !

ஆடி மாசம் அம்மனோட மாசம் !

Youtube-ல் கேட்க…
*****************************************
ஆடி மாசம் அம்மனோட மாசம் !
வீதி எல்லாம் வேப்பிலையின் வாசம் !
தேடிப் போகும் பக்தர்கள் கூட்டம் !
தாவி அணைக்கும் தாயோட பாசம் !

கோரஸ்:
வந்ததே ! வந்ததே ! ஆடி வெள்ளி ! – நம்ம
ஆட்டி வெச்ச கஷ்டமெலாம் தள்ளுபடி !

சரணம் 1
————
ஆடிப் பட்டம் தேடி வெத…
நெஞ்சுக்குள்ளே பக்தி விதை..(2)
பூவா நெஞ்சில் பூத்திடுவா..
பூவாடைக்காரி மாரியம்மா !

கோரஸ்:
வந்ததே ! வந்ததே ! ஆடி வெள்ளி ! – நம்ம
ஆட்டி வெச்ச கஷ்டமெலாம் தள்ளுபடி !

(ஆடி மாசம் )

சரணம் – 2
——————–

மாரியம்மா மனம் குளிர
மஞ்சள் நீரால் நீராட்டுவோம் !
மஞ்சள் நீரை ஏத்துகிட்டு…
மங்களம் எல்லாம் தந்திடுவா !

கோரஸ்:
வந்ததே ! வந்ததே ! ஆடி வெள்ளி ! – நம்ம
ஆட்டி வெச்ச கஷ்டமெலாம் தள்ளுபடி !

(ஆடி மாசம் )