ஷீரடி பாபா ஊர்வலம்

ஷீரடி பாபா ஊர்வலம்

வண்ணப்​ பூத் தூவுதே ! அந்த மேகங்கள் கூடி…!

சின்னக் குயில் கூவுதே ! புது ராகங்கள் பாடி…!

உள்ளம் பூ பூக்குதே ! கண்கள் வழி பார்க்குதே ! (2)

என்னக் காரணம் நீ சொல்லடி…! தோழியே !

பாபா பாபா ஷீரடி பாபா..! ஊர் வலம் போகும் நேரம்! (2)

சரணம் – 1

கொஞ்சும் இசை வாத்யங்கள் ! மின்னும் மணி தீபங்கள்…! அவன் வரும் வீதி அவையாவும் கோலாகலம் ! (2)

ஹரி நாமங்கள் ! கர கோஷங்கள் ! (2) கண்ட நெஞ்செல்லாம் ஆனந்தமே !….சாயிராம் !

பாபா பாபா ஷீரடி பாபா..! ஊர் வலம் போகும் நேரம்! (2)

(வண்ணப் பூத் தூவுதே !​)

சரணம் – 2

பக்தர் திருக் கூட்டத்தில் பக்தி மணம் வீசியே அவன் வரும் போது இரவெல்லாம் ஒளியானது ! (2)

சந்த்ரோதயம்…மண் மீதிலே ! (2) இந்தத் திருக்காட்சி இதுபோதுமே !….சாயிராம் !

பாபா பாபா ஷீரடி பாபா..! ஊர் வலம் போகும் நேரம்! (2)

(வண்ணப் பூத் தூவுதே !​)