சமயபுரத்தாளுக்கு பூச்சொரிவோம் !

சமயபுரத்தாளுக்கு பூச்சொரிவோம் !

பச்சை பட்டினியா இருக்கா..- தன்
பக்தர்களுக்காக…!
முத்து மகமாயி ! – நம்ம‌
சமயபுரத் தாயி ! (2)

கோரஸ்:
ஒண்ணாக நாம் கூடி
நன்றி சொல்வோம் பாடி ! (2)

(பச்சை)

மாசி கடைஞாயிறுலேர்ந்து
நாலு வாரம் நோன்பிருப்பா !
நீர்மோரு, பானகமும்
படைச்சிடவே ஏத்துக்குவா ! (2)
நோன்பிருக்கும் போதும் அவ..
நம்ம குறை கேட்டிடுவா !
கேட்டு குறை தீர்த்திடுவா !
கேட்டதெல்லாம் தந்திடுவா ! (2)

கோரஸ்:
ஒண்ணாக நாம் கூடி
நன்றி சொல்வோம் பாடி ! (2)

(பச்சை)

பூமுகத்துக் காரியளாம்..
பூமி யாளும் மாரியளாம் !
பூமனசுக் காரியளாம்…
பூ விரும்பும் மாரியளாம் ! (2)
கூடையில அள்ளிவந்து…
பூச்சொரிந்து போற்றிடுவோம்..!
கூடவரும் தெய்வத்துக்கு
மாவிளக்கு ஏற்றிடுவோம் ! (2)

கோரஸ்:
ஒண்ணாக நாம் கூடி
நன்றி சொல்வோம் பாடி ! (2)

(பச்சை)