பூசம் ! பூசம் ! தைப்பூசம்

பாடலை பார்க்க/கேட்க‌<—

பூசம் ! பூசம் ! தைப்பூசம் பாக்க…
போவோம் ! போவோம் ! பழனி மல! (2)
பாதைரொம்ப தூரமில்ல பாருங்க !
ஒண்ணா செல்லுங்க !
வேல்-ன்னு சொல்லுங்க !
பக்க பலமா கந்தன்வருவான் பாருங்க ! (2)
காவடியும் பாரமில்ல கேளுங்க ! இங்க பாருங்க !
கொஞ்சம் கேளுங்க ! – நாம
ஆடிப்பாடி நடந்திடலாம் வாருங்க ! (2)

காலை மாலை…கந்தனின் பேரே…
நாளும் நாளும் சொல்லிடுவோம் ! (2)
பாதையெல்லாம் திருப்புகழ பாடுவோம் ! சேர்ந்து பாடுவோம் !
தாளம் போடுவோம் ! – வரும்
மேடு பள்ளம் தாண்டி நடை போடுவோம் ! (2)
அரோகரா அரோகரா சொல்லுவோம் ! – மீண்டும் சொல்லுவோம் !
உள்ளம் துள்ளுவோம் ! – அது
எதிரொக்கும் மலையில் முருகன் கேட்கவே ! (2)

மேகம்…மேகம்…சூரியன் மூடும்..
வெயில், பனியும் நமக்கேதுங்க? (2)
கந்தவேலின் பக்தர் எல்லாம் போகையில்…அந்த வானமும்..
சாந்த மாகுமே ! – நாம‌
முருகனோட‌ பயணம் நல்லா அமையுமே ! (2)
சந்தனத்தின் வாசம் வந்து மோதுமே…காத்தில் சேருமே !
நம்மை சீண்டுமே… – அது
கந்தனவன் மேனிதொட்டு வந்ததே ! (2)

சொந்தம்.. பந்தம் ! வீடெல்லாம் மறந்தோம்…!
சோறு தண்ணி தேவையில்லயே…! (2)
கால்வலியோ களைப்பெதுவோ இல்லீங்க ! கவலை இல்லீங்க !
மேல ஏறுங்க ! – நம்ம‌
பால்குடத்தில் அவன் குளிர வேணுங்க ! (2)
வேலவன வேண்டிகிட்டே ஏறுங்க‌ ! மலை ஏறுங்க‌ !
ஆமா ஏறுங்க – மலை
ஏறி அங்கே முருகனருள் நாடுங்க ! (2)