ஆறுபடை

பாடலை பார்க்க/கேட்க‌<—
கடலோரக் கோயிலில‌
திருக் கோயிலில‌
கடம்பனப் பாரு ! (2)
அலையாடும் கரையில…அலைஅலையா கூட்டமாம் !
அழகான திருக் காட்சிதான் !
செந்தூரின் வாசனாம் ! நம் மோட ராசனாம் !
ஊரெல்லாம் அவ னாட்சிதான் ! (2)

திருத்தணிகை மலையினில‌
அந்த மலையினில‌
முருகனைப் பாரு ! (2)
பகை தணியும் கோயிலாம் ! பிணி தணியும் கோயிலாம் !
பல்லாண்டு பழங் கோயிலாம் !
குற வள்ளி தேவிய ! குமேரேசன் சாமியும்
மணம் செஞ்ச திருக் கோயிலாம் ! (2)

அப்பனுக்கே பாடம் சொன்ன
ஒரு பாடம் சொன்ன‌
சுப்பன பாரு ! (2)
ஓம்கார நாதனாம்…ஸ்ரீ ஸ்வாமி நாதனாம்…!
சிங்கார வடிவேலனாம் !
ஸ்ரீ ஸ்வாமி மலையில…விளையாடும் தேவனாம் !
நம்மோட குருநாதனாம் !

பழம் கேட்டு அவ்வைகிட்ட.. – அந்த‌
அவ்வைகிட்ட‌
ஆடிய சோலை ! (2) (விளையாடிய சோலை)
குகநாதன் லீலையாம் ! பழமுதிர் சோலையாம் !
அருள் பூக்கும் பூஞ்சோலையாம் !
சந்தான பாக்கியம்…அருளாக்கும் சோலையாம் !
திருஞானப் பழஞ்சோலையாம் !

திருப்பரங் குன்றத்தில
அந்த குன்றத்தில
குருபரன் பாரு ! (2)
கதிர்காம வேலுக்கு அபிசேகம் இங்கதான் !
கல்யாணத் திருக் குன்றம்தான்!
தெய்வானை தேவிய…குருநாத சாமியும்
மணம் செஞ்ச திருக் குன்றம்தான் ! (2)

வயல் சூழ்ந்த
பழனி மல – நம்ம‌
பழனி மல…
ஆண்டிய பாரு ! (2)
கோதண்ட பாணியாம் ! பழமான ஞானியாம் !
கோவண… குருவாண்டியாம் !
கேட்டாக்க தந்திடும்..குணமான சாமியாம் !
கேட்போமே அருள்வேண்டிதான் ! (2)