மகர ஜோதி !

மகர ஜோதி !

பாடலை பார்க்க/கேட்க‌<—

வான வீதியில…
ஞான தீபமய்யா ! (2)
ஐயப்ப சாமி ! – அவன்
வந்தானே பாரு !
மெய்யாக ஜோதியா முன்னால..! (2)

திருவா பரணப்பெட்டி…
வருதே ஊரைச் சுத்தி (2)
சன்னதி சேர…! – அதை
ஐயனும் சூட…!
நிம்மதி பூக்குது நெஞ்சுல…! (2)

சூடும் ஆபரணம்..
சாஸ்தா மேனியில.. ! (2)
மின்னிடும் போது ! – புது
வண்ணமாய் ஜோதி..!
வந்ததே காந்தமா மலையில…! (2)

ஜோதி காணுறப்போ…
மேனி சிலிர்க்குதய்யா ! (2)
புண்ணியம் கூட…! – நம்
பாவமும் தீர…!
என்னவோ பாக்கியம் தெரியல…! (2)

வேண்ட வேறுஇல்ல..
தேவன் போல இல்ல..(2)
சத்திய தெய்வம் – ஒரு
நித்திய தெய்வம்…!
வேறாரு ஐயன்போல் ஊருல…!(2)

ஜோதி ரூபத்தில…
ஆசி கொடுக்க வந்தான் ! (2)
ஐயப்ப சாமி ! – நம்ம
மெய்யப்ப சாமி !
ஐயமே இல்லையே மனசுல…! (2)