(ஐயப்ப) சாமி பாட்டு

(ஐயப்ப) சாமி பாட்டு

பாடலை பார்க்க/கேட்க‌<—

மலையாள தேசத்துல…
நல்ல தேசத்துல‌
மணிகண்ட சாமி (2)

மலை ஆளும் சாமியாம் ! மண் ணாளும் சாமியாம் !
நம்மோட குருசாமியாம் !
மலை போல நம்பினால்…துணை யாகும் சாமியாம் !
கண்கண்ட ஒருசாமியாம் ! (2)

அலையாடும் கூட்டத்துல‌
பெரும் கூட்டத்துல‌
ஐயப்ப சாமி ! (2)

குறை நீக்கும் சாமியாம் ! குலம் காக்கும் சாமியாம் !
நம்மோட குருசாமியாம் !
நிலை ஏத்தும் சாமியாம் ! விதி மாத்தும் சாமியாம் !
கண்கண்ட ஒருசாமியாம் ! (2)

படியேறிப் பார்த்திடுவோம் !
நாம பார்த்திடுவோம் !
பந்தள சாமி ! (2)

படியேறி பார்த்துட்டா ! பரிவாகும் சாமியாம் !
நம்மோட குருசாமியாம் !
விடிவாக்கி வாழ்விலே ! ஒளிகாட்டும் சாமியாம் !
கண்கண்ட ஒருசாமியாம் ! (2)

கனிவான காந்தமலை !
திரு காந்த மலை !
கலியுக சாமி ! (2)

மணிமாலை சூடினால்…மகிழ் வாகும் சாமியாம் !
நம்மோட குருசாமியாம் !
பணிவாக வேண்டினால்…படி யேத்தும் சாமியாம் !
கண்கண்ட ஒருசாமியாம் ! (2)

நெய் வாசம்…வீசுதய்யா !
நல்லா வீசுதய்யா !
ஹரிஹர சாமி ! (2)

ஒய்யார சாமியாம் ! ஓங்கார சாமியாம் !
நம்மோட குருசாமியாம் !
கைசேர்த்து வேண்டினால்..கை தூக்கும் சாமியாம் !
கண்கண்ட ஒருசாமியாம் ! (2)