ஐயனிடன் வேண்டுதல் !

ஐயனிடன் வேண்டுதல் !

பாடலை பார்க்க/கேட்க‌<—

அகிலாண்ட ஈஸ்வரனே !
அநாத ரட்சகனே !
சாமி ஐயப்பனே ! (2)
அஞ்சுமலை தாண்டி வந்தோம் ஆவலாகவே !
ஐயா உந்தன் திருமுகத்தின் ஒளியைக் காணவே ! (2)

கோரஸ்:
சாமி ஐயப்பனே !
சரணம் ஐயப்பனே ! (2)

வில்லேந்தும் மன்னவனே !
வேலோனின் சின்னவனே !
சாமி ஐயப்பனே ! (2)
அச்சன் கோயில் சன்னதியில் வேண்டிக் கொண்டோமே !
அச்சம் எல்லாம் தீர்த்திடணும் கானகத்தோனே ! (2)

கோரஸ்:
சாமி ஐயப்பனே !
சரணம் ஐயப்பனே ! (2)

சிவநாதன் புத்திரனே !
தவக்கோல சித்திரமே !
சாமி ஐயப்பனே ! (2)
ஆரியங்கா பூஜை செஞ்சு பாடி வந்தோமே !
ஆசி தந்து வாழ்த்திடய்யா ஆனந்தக் குடமே ! (2)

கோரஸ்:
சாமி ஐயப்பனே !
சரணம் ஐயப்பனே ! (2)

புலிமேலே வந்தவனே !
கலிகாக்கும் வல்லவனே !
சாமி ஐயப்பனே ! (2)
குளத்துப்புழை கோயிலிலே உன்னைக் கண்டோமே !
குலம்தழைக்க வைத்திடுவாய் கும்பிடுவோமே !

கோரஸ்:
சாமி ஐயப்பனே !
சரணம் ஐயப்பனே ! (2)

பம்பாவின் நாயகனே !
பக்தர்கள் காவலனே !
சாமி ஐயப்பனே ! (2)
அழுதாவில் நீராடியே வேண்டி வந்தோமே !
அகத்திலுள்ள கறைகள் நீங்க வேண்டிவந்தோமே !

கோரஸ்:
சாமி ஐயப்பனே !
சரணம் ஐயப்பனே ! (2)

மணிமாலை கொண்டவனே !
மணிகண்ட ஆண்டவனே !
சாமி ஐயப்பனே ! (2)
பொன்னு பதினெட்டுபடி ஏறி வந்தோமே !
கண்நிறைய உன்னைக் கண்டு மெய்மறந்தோமே !

கோரஸ்:
சாமி ஐயப்பனே !
சரணம் ஐயப்பனே ! (2)