அற்புதம் காட்டும் ஐயப்பன் ஆலயம் !

அற்புதம் காட்டும் ஐயப்பன் ஆலயம் !

பாடலை பார்க்க/கேட்க‌<—

அற்புதங்கள் காட்டுமொரு ஆலயம் ! – ஐயன்
கற்பகமாய் தந்தருளும் பூவனம் !
வெற்றி தரும் வீரன்…வீற்றிருக்கும் கோலம் !
வாவென்று சொல்லுகின்றதே ! – நம்மை
வாவென்று சொல்லுகின்றதே ! (2)

அஞ்சுமலை அழகனுக்கு வந்தனம் சொல்வோம் ! – ஒரு
அஞ்சுகமாம் ஐயப்பனை கும்பிடச் செல்வோம் ! (2)

கோரஸ்:
சாமி சாமி சரணம் ! சாமி ஐயப்பா !
சரணம் சரணம் சாமி ! சரணம் ஐயப்பா !

வெம்புலியும் வாகனமாய் ஆனதே ! – ஐயன்
அம்புவிழி அசைவினுக்கு ஆடுதே !
அன்பு மயமாக அழைக்கிறது பாரு !
ஐயன் புகழ் நாம் பாடவே ! – சபரி
ஐயன் புகழ் நாம் பாடவே ! (2)

சரண கோஷம் போட்டுபுட்டா சந்தோசமாகும் !
திந்தகதோம் ஆட்டம் ஆட கூடவே ஆடும் ! (2)

கோரஸ்:
சாமி சாமி சரணம் ! சாமி ஐயப்பா !
சரணம் சரணம் சாமி ! சரணம் ஐயப்பா !

சந்தனத்தின் வாசனையும் வீசுதே ! – ஐயன்
சன்னதியை சுற்றிவரும் காற்றிலே !
நெய்யின் மணம் நம்ம நாசியிலே சேரும் !
மலை ஏறி நாம் போகவே ! – சபரி
மலை ஏறி நாம் போகவே ! (2)

மணமணக்கும் மலையழைக்கும் சென்றிடுவோமே !
மனம் மயக்கும் மன்னவனைக் கண்டிடுவோமே ! (2)

கோரஸ்:
சாமி சாமி சரணம் ! சாமி ஐயப்பா !
சரணம் சரணம் சாமி ! சரணம் ஐயப்பா !

கல்வழியும் புல்வெளியாய் ஆனதே – ஐயன்
கருவிழியின் மாயமென‌ தோணுதே !
கைப்பிடித்து நம்மை ஏற்றி விடும் பாரு !
கைவல்யன் காருண்யமே ! – சபரி
கைவல்யன் காருண்யமே ! (2)

நல்ல வழி காட்டிடுவான் ஐயப்ப சாமி ! – ஒரு
கல்மனமும் கரைச்சிடுவான் ஐயப்ப சாமி !

கோரஸ்:
சாமி சாமி சரணம் ! சாமி ஐயப்பா !
சரணம் சரணம் சாமி ! சரணம் ஐயப்பா !

அன்புடனே யானை வழி காட்டுதே ! – ஐயன்
அன்புக்கொரு சாட்சியமும் நாட்டுதே !
இன்பமயம் ஆகும் யாத்திரையின் பாதை !
சரணங்கள் நாம் சொல்லவே ! – ஐயன்
சரணங்கள் நாம் சொல்லவே ! (2)

கன்னிமூல கணபதியைக் கும்பிட்டுச் செல்வோம் !
கவலைதரும் வினைகளினை எளிதினில் வெல்வோம் ! (2)

கோரஸ்:
சாமி சாமி சரணம் ! சாமி ஐயப்பா !
சரணம் சரணம் சாமி ! சரணம் ஐயப்பா !