சாயி தீபாவளி !

சாயி தீபாவளி !
ஆயர்பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ——————————————– பாடலை Youtube-ல் பார்க்க/கேட்க‌ சாயி நாதன் திருவுருவாய் தீப ஒளி நாளிதனில் மாயக் கண்ணன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவன் தான் மண்ணில் வந்த பண்டரியின் பாண்டுரங்கன்.. வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! (சாயி நாதன்) சாயிராமின் பொன்மொழிகள் தேன்இனிப்பு பண்டங்கள்போல்… நம்பி அதன் வழி நடப்போம் வாருங்கள் ! (2) அவன் நாமமெனும் இனிப்பினையே நா ருசிக்கப் பாடிடுவோம் உறவுகளே நட்புகளே. வாருங்கள்..(2) (சாயி நாதன்) தீய்மைமிகு எண்ணங்களின் மன அழுக்கு ஆடையினை… சாய் வளர்க்கும் துனியினிலே போடுங்கள்! (2) புது ஆடையினைச் சூடிக்கொண்டு சாயி என்று சொல்லுவதால்.. இன்ப வெடி சத்தம் வரும் வாழ்வோடு…(2) (சாயி நாதன்) நம்மில் உள்ள தீயவகைள் நரகா சுரன் போலழியும்…! சாய்குருவின் அருட்கரமும் அபயமாகவே ! (2) அவர் நம்மிடையே தெய்வமென‌ அவதரித்து வந்ததற்கு பாக்யமென்ன செய்திருப்போம் சொல்லுங்கள் ! (2) (சாயி நாதன்)