எல்லாத்துக்கும் மூலம் ஆனா ! – அங்காளி !

எல்லாத்துக்கும் மூலம் ஆனா(ள்) !
துள்ளிவரும் சூலம் ஆனா(ள்) ! (2)
பூமி செஞ்ச தாயி…! – நம்ம
சாமி யான மாயி ! (2)
அங்காளம்மா..வந்தாளம்மா..ஆதாரமா…!
மண்ணிதிலே மூத்தவளா சீதனமா…! (2)

எல்லாருக்கும் தாயும் ஆனா(ள்) !
மயானத்து தீயும் ஆனா(ள்) !
ஆயி ! முத்து மாரி ! – வந்து
சூரை ஆடும் காளி ! (2)
குங்குமத்த கொட்டிவெச்சு விளையாடுவா !
சஞ்சலத்த தள்ளி வெச்சு வழிகாட்டுவா ! (2)

மயானத்தில் ஆதி ஆனா(ள்) !
மலையனூரின் ராணி ஆனா(ள்) ! (2)
கோவம் கொண்ட நீலி – சிவன்
சாபம் தீர்த்த காளி ! (2)
சொக்கனவன் சுந்தரியாய் சொகவாசியா(ய்)..!
தங்கிபுட்டா சுடலையிலே மகராசியா(ய்)..! (2)

புற்றாகியே கோயில் ஆனா(ள்) !
வந்தாடிடும் நாகம் ஆனா(ள்) ! (2)
சீறிப் பாயும் பாம்பு ! – நம்ம
மாரி யாளே நம்பு ! (2)
சுத்தி வந்தா சக்தி தரும் தேவியம்மா!
பத்திரமா பாத்துக்குவா சத்தியமா ! (2)

பம்பைஒலி ஓசை ஆனா(ள்) !
அமாவாச பூசை ஆனா(ள்) ! (2)
ஏரிக் கரையில் வாழ்வா(ள்) – நல்ல
ஏத்தம் எல்லாம் தருவா ! (2)
சந்தம் சொன்னா முந்தி வந்து நடமாடுவா !
வந்து நின்னு பக்தருக்கு உடனாடுவா !