ஜகமே புகழும்

ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திருமதி. ஷோபனா விக்னேஷ்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————–

பல்லவி ஜகமே புகழும் ஜகத்குருவே !

எளிமை என்பதன் மறுவுருவே!

தெய்வத் தோற்றம் உன் திரு உருவே !

சரணடைந்தோமே அருள் பெறவே !

கோரஸ்: சரணம் ! சரணம் ! சங்கரனே ! திருவடி சரணம் சத்குணனே !

சரணம் – 1

சுவாமிநாதனாய் வந்தவனே ! –

எங்கள் ஸ்வாமியும், நாதனும் ஆனவனே ! (2)

தேவி காமாட்சி சேயாகி.. 

தவ‌ ஞான ஒளி கொடுத்த குருபரனே !

கோரஸ்: சரணம் ! சரணம் ! சங்கரனே !

திருவடி சரணம் சத்குணனே !

சரணம் – 2

வேத குருவான அருட்சுடரே ! 

எங்கள் வேதமும், நாதமும் உன் பெயரே ! (2)

பாதத் தாமரை நறுமலரை..-

இங்கு பாடி பணிந்திடுவோம் இறுதிவரை…!

கோரஸ்:

சரணம் ! சரணம் ! சங்கரனே !

திருவடி சரணம் சத்குணனே !