சாய் லீலை !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்

பாடியவர்: திரு. ராகுல்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– வேப்ப மரத்தடியிலே தோன்றி வந்த வேந்தனே ! வேதனைகள் தீர்த்தருளும் வைத்யநாதனே ! கற்பகமே ! கண் கலங்கி மெய் சிலிர்க்கும்….! அற்புதமான உன் லீலைகளைக் கேட்டிடவே ! ——— ஈரேழு ஆண்டாக… கடும் வயிற்று வலியாலே… பெரும் இன்னல் உற்றாரே தத்தோபந்த் என்பாரும் ! ஈரேழு உலகாளும் சாயீசனே ! உன் திருக் கரத்தாலே… உதி தந்து வலி தீர்த்தாய் ! உன் மகிமை போற்றி ! போற்றி ! ———— ஊருக்குப் பொதுவான… தானியக் கிடங்கினிலே.. தீவிபத்து நிகழுமென முன்கூட்டியே அறிந்தாய் ! சீரான வழிகாட்டும் குருநாதனே ! சிறிதளவு நீர்தெளித்து…பெருந்தீயை அணைத்தாயே ! உன் லீலை போற்றி ! போற்றி ! ———— சோதிக்க வந்தவனை அவன் தந்தைக் குரலினிலே… ஏன் வந்தாய் எனக் கேட்க…நிலை குலைந்து போனானே ! ஜோதிவடிவானவனே…ஜகன்நாதனே ! உன் திருவுளத்தால்… பிழை பொறுத்து அருள் கொடுத்தாய் ! உன் கருணை போற்றி ! போற்றி ! ———–