“சாயி ராமாயணம்”

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்

பாடியவர்: திரு. ராகுல்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– “சாயி ராமாயணம்” என்னும் “சாய் சரித்திரம்”… அனுதினமும் செய்திடுவாய் பாராயணம் ! அல்லவைகள் ஓடி விடும் ! நல்லவைகள் நாடி வரும் ! அருள் பொழியும் குருவடியின் மகிமையினாலே ! மகிமையினாலே ! மகிமையினாலே ! மகிமையினாலே ! //சாய்ராம் லீலை பாடும் கீதம் ! கேட்டால் இனிக்கும் தேனாய் நாளும் !// (“சாயி ராமாயணம்” ) அருள் மணக்கும் வேதம்அது ! ப்ரணவம் போன்ற நாதம்அது ! இருள் நீக்கி ஒளி காட்டும்… திருவிளக்கைப் போன்றது ! சாயிராமின் லீலைகளை விருந்தெனவே படைப்பது ! நோய்நொடியை நீக்குகின்ற மருந்தெனவே இருப்பது ! நோய்நொடியை நீக்குகின்ற மருந்தெனவே இருப்பது ! மருந்தெனவே இருப்பது !…. //சாய்ராம் லீலை பாடும் கீதம் ! கேட்டால் இனிக்கும் தேனாய் நாளும் !// (“சாயி ராமாயணம்” ) ஞான குரு ஆகியவன் ! ஞாலமெல்லாம் ஆளுபவன் ! மோன நிலை எய்தியவன் ! மோகனன் ! பரி பூரணன் ! ஷீரடியின் நாதனவன் பெருமை பேசும் காவியம் ! படித்திடவே சேர்ந்திடுமே புண்ணியம் பல்லாயிரம் ! படித்திடவே சேர்ந்திடுமே புண்ணியம் பல்லாயிரம் ! புண்ணியம் பல்லாயிரம் ! //சாய்ராம் லீலை பாடும் கீதம் ! கேட்டால் இனிக்கும் தேனாய் நாளும் !// (“சாயி ராமாயணம்” )