எல்லாம் வல்ல‌ சிவனே !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்

பாடியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– எல்லாம் வல்ல‌ சிவனே !…சிவனின் ரூபம் அவனே ! ​ஸ்ரீஜெயராமனும் அவனே ! கண்ணன் ஹரிமாதவனே ! ஜெய் ஜெய் சாயி பாபா ! – உன் பெயர் சொல்லி அழைத்தோம் வா! வா ! உன் அருட் பார்வை தா ! தா ! உன் அருட் பார்வை தா ! தா ! // துவாரகமாயி ! ஸ்ரீ ஜெய சாயி ! கருணை கற்பகமே ! அனல் உரு ஜோதி ! சத்குரு சாயி ! கலியுக அற்புதமே ! // (எல்லாம் வல்ல‌ சிவனே) மதங்களை கடந்த இறைவன் ! – தன் பதங்களை பணிந்தவர் தலைவன் ! இதந்தரும் மந்திரம் பாபா ! – அதை அனுதினம் போற்றி வா வா ! அனுதினம் போற்றி வா வா ! // துவாரகமாயி ! ஸ்ரீ ஜெய சாயி ! கருணை கற்பகமே ! அனல் உரு ஜோதி ! சத்குரு சாயி ! கலியுக அற்புதமே ! // (அல்லா அல்லா ) எதற்கு கலங்கணும் நீயும் ? – அவன் உனக்கென சுமப்பான் பாரம் ! கலங்கிடும் அன்பருக்கெல்லாம் – அந்த‌ பாபா கலங்கரை விளக்கம் ! பாபா கலங்கரை விளக்கம் ! // துவாரகமாயி ! ஸ்ரீ ஜெய சாயி ! கருணை கற்பகமே ! அனல் உரு ஜோதி ! சத்குரு சாயி ! கலியுக அற்புதமே ! // (எல்லாம் வல்ல‌ சிவனே )