எங்கோ ஒருவனை

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்

பாடியவர்: திரு. உன்னிமேனன்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– எங்கோ ஒருவனைத் தேர்ந்தெடுத்தாய் ! – அவன் ஷீரடி வந்திட நீ அழைத்தாய் ! ஒருமுறை வந்தவன் உன்மத்தமானான் ! நீயே கதியென்று உன் வசமானான் ! (எங்கோ ஒருவனைத்) கோரஸ்: நின் துணைபோதும் ஷீரடி நாதா ! எங்களுக்கேது பயமே ! சிந்தாமணியாய் நீஅருள்பொழிய வாழ்வே இன்ப மயமே! சரணம் – 1 கைத் தட்டி அழைத்தாய் ! கைப்பிடித்தே அழைத்தும் போனாய் ! உனை நம்பிக் கைசேர்த்தான் ! நம்பிக்கை ஒளி கண்டான் ! (கைத் தட்டி) கைவல்ய வரதா ! ஸ்ரீ சாயி நாதா ! கைசேர்த்து உனை வணங்க‌ கைகூடும் வேண்டுவன….பாபா..! (எங்கோ ஒருவனைத்) கோரஸ்: நின் துணை போதும் ஷீரடி நாதா ! எங்களுக்கேது பயமே ! உன் நினைவோடு தொடங்குவதெல்லாம் திண்ணமாக ஜெயமே ! சரணம் – 2 உனைக் காணும் முன்பு கொண்ட‌ வாழ்க்கையது வேறு ! வேறு ! உனைக் கண்ட பின்பு காணும் வாழ்க்கையது வேறு ! வேறு ! (உனைக் காணும் முன்பு கொண்ட) நீயே வரவைத்தாய் ! நீயே வரம் கொடுத்தாய் ! உன் அருட் கருணை என்ன? நெஞ்சம் நெகிழ்ந்திடுதே !….பாபா..! (எங்கோ ஒருவனைத்) கோரஸ்: நின் துணையிருக்க ஷீரடி நாதா ! எங்களுக்கில்லை பயமே ! உன் நினைவோடு தொடங்குவதெல்லாம் திண்ணமாக ஜெயமே !