வேலைப் பணிவதேநம் வேலை

பாடலை பார்க்க/கேட்க‌<—

வேல், மயில், சேவல், ஓம்
——————————————-

வேலைப் பணிவதேநம் வேலை ! – தினம்
வேண்டிடுவோம் மூ வேளை ! (2)
ஆறுதல் தருமே ! ஆனந்தம் தருமே ! ஆறு தலையனின் வேலே ! (2)
குருவேல் ! திருவேல் ! கதிர்வேல் ! வடிவேல் !
வெற்றிகள் சேர்த்திடும் பெருவேல் !
சூரனை மாய்க்கும்…தேவரைக் காக்கும்…
வேலன் தாங்கும் அந்தத் திருவேல் ! (2)

என்ன புண்ணியமோ மயிலே ! – எங்கள்
கந்தன் திருவடிகள் தாங்க ! (2)
ஓடிடுவாயே ! வேலனை ஏந்தி !அங்கும் இங்குமே நீயும் ! (2)
திரிவாய் ! பரிவாய் ! அவனோ டலைவாய் !
விளை யாடிடுவாய் மயிலே !
அருள்மழை வருமே ! அதுசுகம் தருமே !
நீயும் தோகை விரித்தாட‌! (2)

கொடியில் ஆடுமந்த‌ சேவல் ! – அது
கூவும் போதுதான் விடியல் ! (2)
குமரனின் கொடியில்… ஆடிடும் சேவல் ! கூவி அவன்பேரை பாடும் ! (2)
வருவான் ! முருகன் ! தருவான் ! அபயம் !
என்றுரை செய்யும் முன்னே !
வெற்றியின் கொடியே ! வீரனின் கொடியே !
வேலன் ஏந்திடும் கொடியே ! (2)

‘ஓம்’ என்னுமொரு ப்ரணவம் ! – அதை
ஓதக் கூடிவரும் செல்வம் ! (2)
சரவண பவ ஓம் ! ஷண்முக குரு ஓம் ! நாளும் நாளுமே சொல்வோம் ! (2)
அறிவோம் ! தெளிவோம் ! பணிவோம் ! தொழுவோம் !
ஓமெனும் மந்திரம் ஓதி…!
நலம் சேர்த்திடுமே ! பலம் கூட்டிடுமே !
சுவாமி நாதனின் அருளால் ! (2)