வாரான் ! வேலன் !

பாடலை பார்க்க/கேட்க‌<—

முருகன் வருகிறான் !
————————————-
வாரான் ! வேலன் அந்த பழனிமலையில !
தேரில் ஊர்வலமா கொள்ளை அழகுல…! (2)
மொட்டை போட்ட கூட்டம் – பல‌
காவடிகள் ஆட்டம் !
எல்லாம் பாக்க வர்றான் ! (2)
வாரான் ! வேலன் அந்த பழனிமலையில !
தேரில் ஊர்வலமா கொள்ளை அழகுல…! (2)

கோரஸ்:
தைப்பூச நாயகா ! கந்த வேலய்யா !
சிவநேச பாலகா ! எங்க முருகய்யா !

தேனும் வாழைப்பழம் பேரீச்சைபழமும்
சேர்த்து நெய்யுடனே பஞ்சா அம்ரிதமாய் (2)
அண்டா எல்லாம் பொங்க ! – அத‌
அன்பா பக்தர் தாங்க‌…
ருசிக்க வேலன் வர்றான் ! (2)
தேனும் வாழைப்பழம் பேரீச்சைபழமும்
சேர்த்து நெய்யுடனே பஞ்சா அம்ரிதங்க‌ (2)

கோரஸ்:
தைப்பூச நாயகா ! கந்த வேலய்யா !
சிவநேச பாலகா ! எங்க முருகய்யா !

வாசம் தூக்கும் நல்ல சந்தனத்தோட‌
ஜோரா சேரும் பன்னீர் அதில் அபிசேகம் ! (2)
உள்ளம் குளிர்ந்து போனான் – நம்ம‌
அன்படிமை ஆனான்
ஆசி செய்ய வர்றான் ! (2)
வாசம் தூக்கும் நல்ல சந்தனத்தோட‌
ஜோரா சேரும் பன்னீர் அதில் அபிசேகம் ! (2)

கோரஸ்:
தைப்பூச நாயகா ! கந்த வேலய்யா !
சிவநேச பாலகா ! எங்க முருகய்யா !

மேள தாளமுடன் நாதஸ்வரம் தான் !
பாட்டாய் பாடுகிற திருப்புகழும் தான் ! (2)
கேட்கும் எட்டு திக்கும் ! – அதக்
கேட்டு மனம் சொக்கும் !
கேட்க கந்தன் வர்றான் !
மேள தாளமுடன் நாதஸ்வரம் தான் !
பாட்டாய் பாடுகிற திருப்புகழும் தான் ! (2)

கோரஸ்:
தைப்பூச நாயகா ! கந்த வேலய்யா !
சிவநேச பாலகா ! எங்க முருகய்யா !

வேல்வேல் வேல்முருகா செந்தில் ஆண்டவா !
வா ! வா ! மால்மருகா ! எம்மைக் காண வா ! (2)
கூட்டம் போடும் கோஷம் ! – அந்த‌
வானம் தாண்டி கேட்கும் !
காக்க கந்தன் வர்றான் ! (2)
வேல்வேல் வேல்முருகா செந்தில் ஆண்டவா !
வா ! வா ! மால்மருகா ! எம்மைக் காண வா ! (2)

கோரஸ்:
தைப்பூச நாயகா ! கந்த வேலய்யா !
சிவநேச பாலகா ! எங்க முருகய்யா !