சந்திரசேகரன் சிவனும்

ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திரு.அனந்து

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– சந்திர சேகரன் சிவனும்…சுந்தரத் திருமால் அவனும் ஒன்றென சேர்ந்ததோர் வடிவம் ! எங்கள் காஞ்சி மாமுனி அவதாரம் ! ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர சதாசிவா ! சரணம் – 1 நல்லறம் காக்க வந்தான் ! நல்வழி காட்ட வந்தான் ! இல்லறம் அது விலக்கி இளமையில் துறவு கொண்டான் ! வையகம் வாழ்த்திடுமோர்… வேந்தனாய் ஆள வந்தான் ! செங்கோல் எனக் கையில் தண்டம் தாங்கி ! ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர சதாசிவா ! சரணம் – 2 பண்முகம் கொண்டவனாம் ! இன்முகம் காட்டிடுவான் ! அன்புடன் வந்தவர்க்கு அருளின் மழை பொழிவான் ! ஆகம சாஸ்திரங்கள்…. அதன் வழி தெளிந்தவனாம் ! நான்மறை அறிந்தவனாம் ஞானஒளிச்சுடராம் ! (ஹர ஹர சங்கர)