நூல் கொண்ட பொம்மை நானே !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்

பாடியவர்: திரு. M.S.கோபாலகிருஷ்ணன்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– நூல் கொண்ட பொம்மை நானே ! குருசாயி நாதன் கையில் ! நாள்தோறும் அவனே என்னை… நடத்திடுவான் நேரிய வழியில் ! கோள் என்ன? நாள், திதி என்ன? பாபாவின் துணைஎன் அருகில்… (நூல் கொண்ட பொம்மை ) கல்லுடன் முள்ளும் சேர்ந்த கடியதோர் பாதையைக் காட்டி… சென்றிட வைப்பது போலேத்… தோன்றிடும்…பயமில்லை அறிவாய் ! ‘ஓம் சாயி’ மந்திரம் சொல்லி… அவன் சொன்ன பாதை சென்றால்… ‘வெற்றி மாலை’ சேர்ந்திடுமே ! வாழ்வில் ஒளி வீசிடுமே ! (நூல் கொண்ட பொம்மை ) ‘ஷீரடி பாபா’ என்று கூறிடும் பக்தரை எல்லாம்… ஓரிடம் சேர்ந்திட வைப்பான் ! புதியதாய் உறவு சமைப்பான் ! ஒன்றாகக் கூடிய அடியார் ! அவன் லீலை பேசி சிலிர்ப்பார் ! ஆனந்தத்தில் களித்திடுவார் ! அற்புதத்தில் திளைத்திடுவார் ! (நூல் கொண்ட பொம்மை )