psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ கருட பகவான் 108 போற்றி

🕉️ கருடன்
Originals

🎵 Watch/Listen on YouTube


1)
வினதையின் அன்புத் திருமகனே ! கருட பகவானே போற்றி !
விஷ்ணு பகவானின் வாகனனே ! கருட பகவானே போற்றி !
பறவைகள் இனத்தின் மன்னவனே ! கருட பகவானே போற்றி !
பக்தர் விரும்பிடும் அன்பினனே ! கருட பகவானே போற்றி !
அரிய மறைகளின் திருவுருவே! கருட பகவானே போற்றி !
அக்கினி போலே ஒளிர்வடிவே ! கருட பகவானே போற்றி !
பெரிய திருவடி ஆனவனே ! கருட பகவானே போற்றி !
பேரொளி யாக ஜொலிப்பவனே ! கருட பகவானே போற்றி !

Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

2)
அறிவின் களஞ்சியம் ஆனவனே ! கருட பகவானே போற்றி !              
அழகு சிறகுகள் கொண்டவனே ! கருட பகவானே போற்றி !
நிலவின் ஒளிபோல் திருமுகனே ! கருட பகவானே போற்றி !
நிரந்தர திருமால் சாதகனே ! கருட பகவானே போற்றி !
அருணனின் இளையோன் ஆனவனே! கருட பகவானே போற்றி !
அகிலம் யாவையும் காப்பவனே ! கருட பகவானே போற்றி !
கருணை வடிவான காருண்யனே ! கருட பகவானே போற்றி !
காஸ்யப முனிவரின் புதலவனே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

3)
உற்சா கத்தில் இருப்பவனே ! கருட பகவானே போற்றி !
உலகம் யாவையும் காப்பவனே ! கருட பகவானே போற்றி !
கற்பக மாகத் தருபவனே ! கருட பகவானே போற்றி !
கருடா சலத்தில் உறைபவனே ! கருட பகவானே போற்றி !
சத்திய நெறியினைக் காப்பவனே ! கருட பகவானே போற்றி !
சக்ர பாணியின் சேவகனே ! கருட பகவானே போற்றி !
சத்தியம் தெளிமெய் ஞானியனே ! கருட பகவானே போற்றி !
சகுனம் சுபமாக்கும் காட்சியனே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

4)

அன்னையை அடிமையில் மீட்டவனே! கருட பகவானே போற்றி !
அமிர்தம் கொணர்ந்து வந்தவனே ! கருட பகவானே போற்றி !
பொன்னொளி வீசிடும் மேனியனே ! கருட பகவானே போற்றி !
பொங்கிடும் மங்கலம் அருள்பவனே ! கருட பகவானே போற்றி !
தேவரும் அசுரரும் தொழுபவனே! கருட பகவானே போற்றி !
தேவேந் திரனை வென்றவனே ! கருட பகவானே போற்றி !
வேத சந்தம் ஏழானவனே! கருட பகவானே போற்றி !
வேண்டும் வரங்களை அருள்பவனே! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

5)
மறைகளின் சாரம் ஆனவனே ! கருட பகவானே போற்றி !
மல்லிகை மலர்ப்ரியன் ஆனவனே! கருட பகவானே போற்றி !
குறைகளிலாத குணவானே ! கருட பகவானே போற்றி !
குங்குமப் பூவை அணிபவனே ! கருட பகவானே போற்றி !
நாகங்கள் கூட்டப் பகையோனே ! கருட பகவானே போற்றி !
நாரணன் பதங்கள் சுமப்போனே! கருட பகவானே போற்றி !
நாகாபரணம் பூண்டவனே ! கருட பகவானே போற்றி !
நல்லோர் இன்னல்கள் தீர்ப்பவனே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

6)
வாரணம் போல்பலம் கொண்டவனே ! கருட பகவானே போற்றி !
வானகம், மண்ணகம் உறைவோனே ! கருட பகவானே போற்றி !
பூரண பாக்கியம் அருள்வோனே ! கருட பகவானே போற்றி !
புதபகவான் அருள் சேர்ப்பவனே ! கருட பகவானே போற்றி !
முக்குணம் கடந்த நிர்குணனே ! கருட பகவானே போற்றி !
முடிவென் றில்லா நிரந்தரனே ! கருட பகவானே போற்றி !
சுக்கிரன் பார்வையை மீட்டவனே ! கருட பகவானே போற்றி !
சூட்சம வடிவங்கள் கொள்பவனே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

7)

நஞ்சினை முறித்திடும் வீரியனே ! கருட பகவானே போற்றி !
நாலாயிரம்புகழ் நற்குணனே ! கருட பகவானே போற்றி !
பஞ்சமி திதியினில் உதித்தவனே ! கருட பகவானே போற்றி !
பதி கேந்திரனாய் வந்தவனே ! கருட பகவானே போற்றி !
எண்ணிலா நாமம் கொண்டவனே ! கருட பகவானே போற்றி !
ஏகாதசியின் நாயகனே ! கருட பகவானே போற்றி !
கண்களில் கருணையைப் பொழிபவனே! கருட பகவானே போற்றி !
கஜேந்த்ர மோட்சம் தந்தவனே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

8)

கார்கோ டகன் உன் தோள்களிலே! கருட பகவானே போற்றி !
குளிகன் உந்தன் கழுத்தினிலே ! கருட பகவானே போற்றி !
ஆதிசேஷன் உன் பதத்தினிலே ! கருட பகவானே போற்றி !
சங்கசூடன் உன் சிரத்தினிலே ! கருட பகவானே போற்றி !
வாசுகி நாகம் உன் முப்புரியே ! கருட பகவானே போற்றி !
தட்சகன் உன்னிடை அணிகலனே ! கருட பகவானே போற்றி !
பதுமன் ஒருசெவி காதணியே ! கருட பகவானே போற்றி !
மஹா பதுமன் மறு காதணியே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

9)

ருத்ரா, சுகீர்த்தி துணையவனே ! கருட பகவானே போற்றி !
துன்பமும், பிணிகளும் கடந்தவனே ! கருட பகவானே போற்றி !
பத்ரா சலத்தில் பொன்மயனே ! கருட பகவானே போற்றி !
ப்ரகாச மாக ஜொலிப்பவனே ! கருட பகவானே போற்றி !
பேரானந் தத்தில் நிலைத்தவனே ! கருட பகவானே போற்றி !
பெரியாழ்வாராய் வந்தவனே ! கருட பகவானே போற்றி !
பேராற் றலினைக் கொண்டவனே ! கருட பகவானே போற்றி !
பெருமை மிகுந்த திருவடியே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

10)

வெள்ளியங் குடியில் அருள்பவனே ! கருட பகவானே போற்றி !
வேங்கட தீர்த்தம் கொணர்ந்தவனே ! கருட பகவானே போற்றி !
புள்ளர சாகத் திகழ்பவனே ! கருட பகவானே போற்றி !
புத்திர பாக்கியம் தருபவனே ! கருட பகவானே போற்றி !
தேசிகர் போற்றிய வேதியனே ! கருட பகவானே போற்றி !
தேவர், தேவியர் புகழ்பவனே! கருட பகவானே போற்றி !
மாசி கருடனாய் சிறப்பவனே ! கருட பகவானே போற்றி !
மாலன், லட்சுமியுடன் பறப்பவனே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

11)

எண்வித பார்வைகள் கொண்டவனே ! கருட பகவானே போற்றி !
எண்வித செல்வங்கள் தருபவனே ! கருட பகவானே போற்றி !
கண்ணன் விரும்பிடும் புள்ளினமே ! கருட பகவானே போற்றி !
கருத்மான் என்னும் பெயரினனே ! கருட பகவானே போற்றி !
வைர முடியினைக் கொணர்ந்தவனே ! கருட பகவானே போற்றி !
வெற்றிக் கொடியில் நிலைத்தவனே ! கருட பகவானே போற்றி !
வைனதேயன் என வந்தவனே ! கருட பகவானே போற்றி !
வைகுந்தன் அடி பணிபவனே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

12)
காட்சியில் புண்ணியம் தருபவனே ! கருட பகவானே போற்றி !
காருட மணியைப் பூண்டவனே ! கருட பகவானே போற்றி !
நாச்சியார் கோயிலில் உற்சவனே ! கருட பகவானே போற்றி !
நாக பாசத்தை விடுத்தவனே ! கருட பகவானே போற்றி !
பயத்தினை நீக்கிடும் மந்திரனே ! கருட பகவானே போற்றி !
பாண்டவர் வ்யூகம் ஆனவனே ! கருட பகவானே போற்றி !
ஜயகருடன் எனும் பெயரினனே
ஜனார்தனன் தாள் பணிபவனே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

13)

கூப்பிய திருக்கரம் கொண்டவனே ! கருட பகவானே போற்றி !
குப்தர்கள் முத்திரை ஆனவனே! கருட பகவானே போற்றி !
கூப்பிடும் நொடியிலே வருபவனே! கருட பகவானே போற்றி !
குறைகளை தீர்த்தருள் தருபவனே! கருட பகவானே போற்றி !
சத்திய சாதகன் ஆனவனே! கருட பகவானே போற்றி !
சாமவேத ஒலிக் குரலினனே! கருட பகவானே போற்றி !
நித்திய சூரியாய் இருப்பவனே ! கருட பகவானே போற்றி !
நீள்நெடு நாசியைக் கொண்டவனே ! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (2)

14)

தர்ப்பை புல்லினைக் கொணர்ந்தவனே! கருட பகவானே போற்றி !
த்வாரகை காவலாய் நின்றவனே! கருட பகவானே போற்றி !
விற்பனன் ஆகிய வேதியனே! கருட பகவானே போற்றி !
விரைந்தருள் செய்வாய் நாயகனே! கருட பகவானே போற்றி !
Chorus:
பெரிய திருவடி போற்றி
பெருமாள் திருவடி போற்றி (4)