psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ வரலட்சுமி தமிழில்

🕉️ ஸ்ரீ மகாலட்சுமி
Translations


பல்லவி
————–
ஸ்ரீ  வரலட்சுமி  வணங்கினேன் ! செல்வம் அருள்..
நின் பூமலர்பதம் மலர்பதம் பதமே

சரண் சரண் 
(ஸ்ரீ வரலட்சுமி)

அனுபல்லவி
————–
காமனின் தந்தையின் அன்பு துணைவியே ! பொன்..னே…!
கோடி சூர்யன் போலான ஒளியே !
பக்தர்க்கு எளிதே !
நாடுவோர் தனைக் காத்தருளும்..
தாமரை பூவிளம்  கொடியே !
கேடிலா நற் குணவதியே !
கேசவன் உளம் உறைவாயே !

(ஸ்ரீ வரலட்சுமி)

சரணம்
————
ஆவணி பௌர்ணமி முன் வெள்ளிக் கிழமையில்
சாருமதி தொடங்கிய பூஜையை செய்தோம்..

தேவாதி தேவர் தந்த மணிமாலையை சூடிடும் தேவி !
தீனருக்கருள் செய்திடும் நல் வித்தகி, பொன்மனச் செல்வி !
நிலையிலா எண்ணம் அறிவாய் !
கலைகளின் தேவி வணங்குவார் !
கைவல்யம் அருளுபவளே!
கைமேல் பலன் தருபவளே! 
 
(ஸ்ரீ வரலட்சுமி)