வளையல் சார்த்துவோம்
கொஞ்சும் கிளி கோதைக்கு
வளையல் சார்த்துவோம் !
கோரஸ்:
வளையல் சார்த்துவோம் ! – வண்ண
வளையல் சார்த்துவோம் !
அஞ்சுகமாம், ஆடிப் பூர
நாளதனில் அவதரித்த…
கொஞ்சும் கிளி கோதைக்கு
வளையல் சார்த்துவோம் !
கோரஸ்:
வளையல் சார்த்துவோம் ! – வண்ண
வளையல் சார்த்துவோம் !
கோரஸ்:
வளையல் சத்தம் கேட்கும் வீட்டில் சீக்கிரம்..
மழலை சத்தம் கேட்டிடுமே நிச்சயம் ! (2)
சரணம் 1
————-
மாலைசூடிக் கொண்ட தோளில் வளையல் மாலை சூட்டி,
மாலவனைக் கரம்பிடித்த கையில் வளையல் பூட்டி (2)
மின்னுகின்ற மேனியெல்லாம் வண்ண வளையல் சாற்றி(2)
ஒன்றுகூடி பாடிடுவோம் அவள்புகழை போற்றி ! (2)
(கொஞ்சும் கிளி)
சரணம் 2
————-
ரங்கமன்னார் உள்ளத்தினை காதலினால் ஆண்டாள் !
சங்கத் தமிழ் தேனமுதை கவிதையினால் ஆண்டாள் ! (2)
திருமாலின் பக்கம் நின்று திருமகளாய் ஆண்டாள் !
திருவடியைப் பணிந்தவரை கருணையினால் ஆண்டாள் ! (2)
(கொஞ்சும் கிளி )