பாண்டுரங்க அஷ்டகம் தமிழில்
1)
பீம நதிஓரம் !
பெரும் யோகபீடம் !
சீலமிகு முனியோர்
சூழ்ந்திடவே வந்து
பேருவகைக் கோலம்
பூத்தபடி நின்றாய் ! (2)
புண்டலீகன் என்னும்
பக்தனுக்கு அருள…!
Chorus:
பரம்பொருளின் வடிவே ! பாண்டுரங்க நாதா ! (2)
போற்றுகிறேன் உனையே ! போற்றுகிறேன் உனையே ! (2)
2)
நீல முகில் தேகம் !
மின்னல் உடைசூடும் !
கோல மகள் லட்சுமி !
செய்திடுவாள் வாசம் !
சேர்ந்து ஒருகல்லில்
வைத்த இரு பாதம் ! (2)
பேரழகு ரூபம் !
பார்த்திடவே மின்னும் !
Chorus:
பரம்பொருளின் வடிவே ! பாண்டுரங்க நாதா ! (2)
போற்றுகிறேன் உனையே ! போற்றுகிறேன் உனையே !
3)
“என் இடையின் வரையே
இவ்வுலகக் கடலாம்”
என்பதுபோல் இடையில்
கைவைத்து நின்றாய் !
நாபியிலே கமலம்
பூத்திடவே செய்தாய் !! (2)
பூமியெலாம் செய்யும்
ப்ரம்மன் அவன் தங்க!
Chorus:
பரம்பொருளின் வடிவே ! பாண்டுரங்க நாதா ! (2)
போற்றுகிறேன் உனையே ! போற்றுகிறேன் உனையே !
4)
திருமகளே சாயும்
தோளோடு வளையம் !
திருமார்பில் கௌஸ்துப
திருமாலை மின்னும்
மூவுலகும் காக்கும்
சாந்தமிகு ரூபம் ! (2)
தேவிஸ்ரீ லட்சுமி
வாழுகின்ற இல்லம் !
Chorus:
பரம்பொருளின் வடிவே ! பாண்டுரங்க நாதா ! (2)
போற்றுகிறேன் உனையே ! போற்றுகிறேன் உனையே !
5)
செம்பருத்தி மலர்போல்
செந்நிறமாய் அதரம் !
செங்கமல பூபோல்
கண்களது ஒளிரும் !
குண்டலங்கள் செவியில்
கன்னம் வரை ஆடும்! (2)
புன்னகையோ மயக்கும்
முகம்மதியாய் ஜொலிக்கும் !
Chorus:
பரம்பொருளின் வடிவே ! பாண்டுரங்க நாதா ! (2)
போற்றுகிறேன் உனையே ! போற்றுகிறேன் உனையே !
6)
சூடுகின்ற மகுடம்..
சுற்றி ஒளிசிதறும் !
தேவர் தொழும்போது
ரத்தினங்கள் ஒளிரும் !
மூன்றுஇடம் வளையும்
பேரழகுக் கோலம் ! (2)
மயிலிற கினோடு
மாலையினைச் சூடும் !
Chorus:
பரம்பொருளின் வடிவே ! பாண்டுரங்க நாதா ! (2)
போற்றுகிறேன் உனையே ! போற்றுகிறேன் உனையே !
7)
எங்கெங்கும் நீயே
நிறைவானாய் அதுபோல்
எங்கெங்கும் உந்தன்
குழலோசை நிறையும் !
மேய்ப்பவனைப் போலே
திருவேட மிட்டாய் ! (2)
மேய்கின்ற பசுக்கெல்லாம்
பேரின்பம் தந்தாய் !
Chorus:
பரம்பொருளின் வடிவே ! பாண்டுரங்க நாதா ! (2)
போற்றுகிறேன் உனையே ! போற்றுகிறேன் உனையே !
8)
தேவாதி தேவா !
கைவல்ய நாதா !
தேடிவரு வோர்க்கு
துன்பநிலை தீர்ப்பாய் !
ஆதியிலா தேவா !
அவதார நாதா ! (2)
தேவி ருக்மணியின்
உயிரான ஜீவா !
Chorus:
பரம்பொருளின் வடிவே ! பாண்டுரங்க நாதா ! (2)
போற்றுகிறேன் உனையே ! போற்றுகிறேன் உனையே !
பாண்டுரங்கன் துதியாம்
பக்தியுடன் இதனை
வேண்டிதினம் படிப்பார்
வாழ்வில் கரை சேர்வார் !
இறுதியிலே திருமால்
திருப்பதங்கள் அடைவார் (2)
உறுதியாய் தானே…
உறுதியாய் தானே…
Chorus:
பாண்டுரங்க விட்டலா !
பாண்டுரங்க விட்டலா !
பாண்டுரங்க விட்டலா !