psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

மீனாட்சி கல்யாணம்

🕉️ அம்மன்
Originals

🎵 Watch/Listen on YouTube

சொக்கவைக்கும் கண்ணழகி மீனாட்சி – அந்த

சொக்கனோடு பக்கம்நிக்கும் திருக்காட்சி..

சொக்கவைக்கும் கண்ணழகி மீனாட்சி – அந்த

சொக்கனோடு பக்கம் நிக்கும் திருக்காட்சி..

தேவரெலாம் தேவலோகப் பூக்கள் அள்ளி… வீசி…

தேவரெலாம் தேவலோகப் பூக்கள் அள்ளி… வீசி…

வாழ்த்தி அவர் ஆனாரே திருமணத்தின் சாட்சி !

கல்யாணமாம் ..கல்யாணம்.. மீனாட்சி கல்யாணம்..

கொண்டாட்டமாம்..கொண்டாட்டம்..மூவுலகும் கொண்டாட்டம்..

வைகைஆத்தில் பொங்கி வரும் வெள்ளமதைப் போல…

வெச்சிருக்கும் அன்பு பொங்கும் உள்ளத்தினோட..

வைகை ஆத்தில் பொங்கி வரும் வெள்ளமதைப் போல…

வெச்சிருக்கும் அன்பு பொங்கும் உள்ளத்தினோட..

கைத்தலமும் பற்றியது ஈசன் அல்லவா?

கைத்தலமும் பற்றியது ஈசன் அல்லவா?

இந்த வையகத்த வாழவைக்கும் ஜோடி அல்லவா?  

வையகத்த வாழவைக்கும் ஜோடி அல்லவா?

கல்யாணமாம்..கல்யாணம்.. மீனாட்சி கல்யாணம்..

கொண்டாட்டமாம்..கொண்டாட்டம்..மூவுலகும் கொண்டாட்டம்..

கல்யாணமாம்..கல்யாணம்.. மீனாட்சி கல்யாணம்..

கொண்டாட்டமாம்..கொண்டாட்டம்..மூவுலகும் கொண்டாட்டம்..

சங்கத்தமிழ் போலழகு தங்கப் பொண்ணுக்கு

சுந்தரமா பொருத்தமாச்சு சுந்த ரேசர்க்கு…

சங்கத்தமிழ் போலழகு தங்கப் பொண்ணுக்கு

சுந்தரமா பொருத்தமாச்சு சுந்த ரேசர்க்கு…

மங்கையர்க்கு அரசியிவள் அழகைக் காணவே..

மங்கையர்க்கு அரசியிவள் அழகைக் காணவே..

சிவன் மூன்று கண்கள் கொண்டிருப்பார் என்று தோணுதே ! –

மூன்று கண்கள் கொண்டிருப்பார் என்று தோணுதே !